For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆராய்ச்சிகளை தொடர கலாம் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குடியரசுத் தலைவர் ஆன பின்னரும் தனது ஆராய்ச்சிகளையும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர்பதவியையும் தொடர டாக்டர் அப்துல்கலாம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இப்போது இவரது தலைமையில் பல மாணவர்கள் பி.எச்டி. ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்குதொடர்ந்து கைடாக இருக்கவும் கலாம் முடிவெடுத்துள்ளார்.

பேராசிரியராகத் தொடரும் தனது விருப்பத்தை அண்ணா பல்கலைக்கழத்திடம் அவர் தெரிவித்துள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ள பல்கலைக்கழகம் அதற்குத் தேவையானவசதிகளை செய்து தர முடிவு செய்துள்ளது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் டெல்லியில் இருந்த வண்ணம் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்குபாடம் நடத்துவார். இதற்கான வசதிகளை உருவாக்க அதிகாரிகள் இப்போதே நடவடிக்கைளில் இறங்கிவிட்டனர்.

இது தவிர இந்தியா முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளை சந்திக்கும் தனது தொடர் திட்டத்தையும் கலாம்கைவிட மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இவரது தலைமையில் 25 ரிசர்ச் புராஜெக்ட்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆய்வுகளை நிச்சயம் தலைமை தாங்கி முடித்துத் தருவேன் என அந்த மாணவர்களை நேற்று அழைத்துஅப்துல் கலாம் உறுதியளித்தார்.

ஜனாதியாக இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருப்பதால் அதுவரை இந்த ஆய்வுத் திட்டங்களை நேரடியாகவேஇருந்து கவனிக்கவும் கலாம் முடிவு செய்துள்ளார். இதை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.

பி.சிதம்பரம் ஆதரவு:

இந் நிலையில் அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் பி.சிதம்பரம் முழு ஆதரவுதெரிவித்துள்ளார். அவருக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலைப் பின் பற்றி நடக்கும் திறனும் அறிவும் உடையவர் கலாம். தேசத்தைநிச்சயம் வெற்றிப் பாதையில் நடத்திச் செல்வார் கலாம் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X