மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம் வருகிறது
டெல்லி:
மத்திய அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களைச் செய்ய பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.
அடுத்த வாரம் இந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. 11 அமைச்சர்களிடம் இருந்து பதவிகளைப் பறிக்கவும்வாஜ்பாய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிடம் இருந்து நிதியமைச்சர் பதவி பறிக்கப்படுகிறது. சமீப காலத்தில் நடந்தசட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்து வருவதற்கு சின்ஹாவின் தவறான பொருளாதாரதிட்டங்களே காரணம் என ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. ஆகியவை கூறி வருகின்றன.
இதனால் சின்ஹாவை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்பட்டுள்ளது. ஆனால், அவர் வாஜ்பாய்க்கு மிகநெருக்கமானவர் என்பதால் சின்ஹா ஜார்க்கண்ட் மாநில முதல்வராக்கப்படுவார் என்று தெரிகிறது.
அம் மாநில முதல்வர் பாபுலால் மராண்டியை மத்திய அமைச்சராக்கிவிட்டு சின்ஹாவை முதல்வராக்க வாஜ்பாய்முடிவு செய்துள்ளார்.
சின்ஹா வசம் உள்ள நிதியமைச்சப் பதவியை சட்ட அமைச்சர் அருண் ஜேட்லியிடம் ஒப்படைக்கவும் வாஜ்பாய்திட்டமிட்டுள்ளார்.
அதே போல தனது எம்.ஜி.ஆர். அதிமுகவை பா.ஜ.கவில் இணைத்த திருநாவுக்கரசுக்கும் மத்திய அமைச்சர் பதவிதரப்பட உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சிக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கும் பதவிகள் தரப்படவுள்ளன.இதில் மம்தா பாணர்ஜிக்கு நிலக்கரித்துறை வழங்கப்படும் என்று தெரிகிறது.
இப்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள உள்துறை அமைச்சர் அத்வானி நாடு திரும்பிய பின்னர் அமைச்சரவைமாற்றங்கள் செய்யப்படவுள்ளன. வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதிக்குள் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுவிடும்என்று தெரிகிறது.
பா.ஜ.கவைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் சிலரின் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவர்என்றும் தெரிகிறது.


