For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ் கிணற்றில் விழுந்து 4 பேர் பலி: 21 பேர் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

ராசிபுரம்:

ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் கிணற்றில் விழுந்தது. இதில் 3 பெண்கள்உள்பட 4 பேர் இறந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர்.

இதில் பஸ்சுக்கு அடியில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். இன்னொருவரும் உயிரிழந்தார். 9 பெண்கள் உள்பட21 பேர் படுகாயமடைந்தனர்.

பொய்மான்கரடு என்ற இடத்தில் ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த இந்த பஸ்சாலையோர கிணற்றில் பாய்ந்தது. மிகப் பெரிய அந்த விவசாயக் கிணற்றின் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டுஅந்த பஸ் படு வேத்தில் விழுந்தது. அந்தக் கிணறு 30 அடி ஆழம் கொண்டது.

கிணற்றில் தண்ணீர் குறைவாகவும் சகதி நிறைந்து போய் உள்ளது. இதனால் அந்த பஸ் சகதிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. பஸ்ஸிலிருந்து வெளியே குதித்து தப்ப முயன்ற பலர் படுகாயமடைந்தனர். கிணற்றுக்குள் இருந்துஇதுவரை 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அந்த பஸ்சில் 50 பேர் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை அதிக அளவில்இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலானஅதிகாரிகள் அங்கு முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் சேலம் மற்றும் ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X