For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருநாவுக்கரசரின் வளர்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அமைச்சராகியிருக்கும் எஸ்.திருநாவுக்கரசர் நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் அரசியலில் முக்கியத்துவம்வாய்ந்த நபராக மாறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அரசியல் பாடம் பயில ஆரம்பித்து, ஜெயலலிதாவை அரசியலில் நிலை நிறுத்த உதவி, திமுகஉதவியோடு சில காலம் அரசியல் நடத்தி, தற்போது பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துள்ள திருநாவுக்கரசருக்குமத்திய அமைச்சர் பதவி கொடுத்தது மிகவும் பொருத்தமானதே.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, முக்குலத்தோர் வகுப்பைச் சார்ந்த திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் துணை சபாநாயகராகவும் இருந்தவர். அறந்தாங்கிசட்டசபை தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று சாதனை படைத்தவர்.

எம்.ஜி.ஆன் செல்லப் பிள்ளையாக இருந்தவர். அவரது மறைவுக்குப் பின் ஜானகி அணி, ஜெயலலிதா அணி, நெடுஞ்செழியன் தலைமையிலான நால்வர் அணி என அதிமுக பிரிந்தபோதுஜெயலலிதாவை ஆதரித்தார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க பல காரியங்களைச்செய்தார். கட்சி மாறுவதைத் தடுப்பதற்காக, ஜெ. அணி எம்.எல்.ஏக்களை பஸ்சில் ஏற்றிக் கொண்டு இவரும்,சாத்தூர் ராமச்சந்திரனும் ஊர் ஊராக கொண்டு சென்றதை யாருமே மறந்திருக்க முடியாது.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை இந்த அளவுக்குப் பிரகாசமாக இருப்பதற்கு அடித்தளம் போட்டவரேதிருநாவுக்கரசர்தான். ஆனால் காலப் போக்கில் ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் புதுக் கட்சி தொடங்கி நடத்தினார். பின்னர் யாருமே எதிர்பாராத நிலையில் மீண்டும் அதிகவில்இணைந்தார். அதுவும் நீடிக்கவில்லை, கட்சியிலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்து நடத்திவந்தார்.

இந்த நிலையில் திமுக ஆதரவோடு புதுக்கோட்டை எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றார்.

சில காலம் கட்சியை நடத்தி அவர் மத்திய அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்தார். ஆனால் பலிக்கவில்லை.திமுகதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந் நிலையில், கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.க.வில் சேர்ந்தால்உடனடியாக மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்று பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பா.ஜ.க.வில் சேர முடிவு செய்தார் திருநாவுக்கரசர். முக்குலத்தோர்வாக்கு வங்கியை மனதில் வைத்து இவரை உடனே சேர்த்துக் கொண்டது பா.ஜ.க. டெல்லியில் வாஜ்பாய்முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

இப்போது மத்திய துணை அமைச்சராகியுள்ளார் திருநாவுக்கரசர். மாநில அமைச்சராக திறம்பட செயல்பட்டவர்.வெடிய அரசியல் அனுபவம் மிக்கவர். எதிரிகளாலும் விரும்பப்படக் கூடியவர், பழகுவதற்கு இனியவர்.

இத்தனை காலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டுமே சேவையாற்றி வந்த திருநாவுக்கரசர் இப்போது தேசிய அளவில் தனது சேவையை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X