For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானின் கனவு பலிக்காது: கலாம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜம்மு-காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் அம்மாநிலத்தைத் துண்டாட நினைக்கும்பாகிஸ்தானின் கனவு எப்போதும் பலிக்காது என்று ஜனாதிபதி வேட்பாளரான "பாரத ரத்னா" டாக்டர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ள அனைத்து எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் தனக்கு ஆதரவளிக்குமாறுகோரி ஏழு பக்க அறிக்கை ஒன்றை இன்று டாக்டர் கலாம் வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவைத் துண்டாட நினைத்த பாகிஸ்தானின் கனவு கனவாகவேபோய் விட்டது. இனியும் அவர்கள் இந்த முயற்சியில் வெற்றி பெறவே முடியாது.

ஜம்மு-காஷ்மீர் எப்போதுமே நம் நாட்டின் ஒரு பகுதி தான். அதை யாராலும், எந்தச் சக்தியாலும் மாற்றவேமுடியாது.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, கட்சிலிருந்து கொஹிமா வரை, லட்சத் தீவுகளிலிருந்துஅந்தமான்-நிகோபார் தீவுகள் வரை உடைக்க முடியாத ஒரே நாடாகத் தான் இந்தியா உள்ளது.

மேலும் இந்திய மக்கள் அனைவருமே நாகரிகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றால் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளோம்.

நாட்டின் பாதுகாப்பையே இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தேச நலனாக எண்ணிச் செயல்பட வேண்டும். பலநூற்றாண்டுகளாகப் பலவிதங்களிலும் கஷ்டப்பட்டுள்ளனர் என்பதை கடந்த கால வரலாறு சொல்லும். எனவேநாட்டின் பாதுகாப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நாம் அணு ஆயுதகள், ஏவுகணைகள் மற்றும்விண்வெளி ஆகியவற்றின் மூலம் பெற்றுள்ளோம்.

தேசத்தின் பாதுகாப்புடன் நின்று விடாமல் வறுமையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிப்பதையேஅனைவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தால் அரசியல் சாசனத்தின் படி என்னுடைய பணியை உண்மையாகவும்நேர்மையாகவும் செயல்படுவேன்.

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் எப்போதும் சுமூகமான சூழ்நிலை நிலவுவதற்கு என்னால் முடிந்தஉதவிகளைச் செய்வேன்.

இந்தியாவின் மதச்சார்பின்மை என்ற கொள்கையை நான் தொடர்ந்து கடைப்பிடிப்பேன். நம் அரசியல் சாசனத்தின்அடிப்படையில் எந்த மாற்றமும் கொண்டு வரத் தேவையிருப்பதாக நான் கருதவில்லை.

நாட்டில் எவ்வளவோ முன்னேற்றங்கள் தென்பட்டாலும் இன்னும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் முடங்கிக்கொண்டேதான் உள்ளனர். அல்லது முடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நாட்டின் நலனில் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் கடமையும் உரிமையும் உள்ளது என்பதைஅறிந்து கொண்டு அவர்கள் முன்வர வேண்டும்.

விவசாயத்திலிருந்து தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சாப்ட்வேர், விண்வெளி ஆய்வு, அணு சக்தி, பாதுகாப்பு,சுகாதாரம் என்று அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேறி, இந்தியா ஒரு "சூப்பர் பவர் கன்ட்ரி" என்பதைத்தொடர்ந்து நிரூபித்து வருகிறோம்.

நான் இதுவரை சந்தித்துள்ள 55,000 பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரிடத்திலும் உள்ள அறிவுத்திறமையையும் நாட்டுப் பற்றையும் கண்டு பிரமித்துப் போயிருக்கிறேன்.

இவர்களை நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் நம் நாடும் வல்லரசாகி விடும் என்பதில் சந்தேகமே இல்லைஎன்று கூறியுள்ளார் டாக்டர் கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X