For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ உடல் நிலை: சிறை அதிகாரிகளிடம் பிரதமர் அலுவலகம் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

பொடா சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவின் உடல் நிலை குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து சிறைஅதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இப்போது சிறையில் பிளாக் ஏ பகுதியில் ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளார் வைகோ. இங்கு பேன் கூட கிடையாது. வெறும் படுக்கைதலையணை மட்டும் தான். கொசுக்கடியில் அவர் மிகவும் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேற்று வேலூர் மத்திய சிறைக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவரது உடல் நிலை குறித்துபிரதமர் அலுவலக அதிகாரி தகவல் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவரை சிறையில் துன்புறுத்தக் கூடாது எனவும், அவருக்கு எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும் எனவும் பிரதமர்அலுவலக அதிகாரிகள் சிறைத்துறையினருக்கு உத்தரவிட்டதாகவும் தெரிகிறது.

வைகோவுக்கு போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறையினர் கூறிய விளக்கத்தை பிரதமர் அலுவலக அதிகாரிகள்ஏற்கவில்லை. தங்களுக்கு மத்திய உளவுப் பிரிவு மூலம் வரும் தகவல் வேறு மாதிரியாக உள்ளதாகக் கூறிய பிரதமர் அலுவலக அதிகாரிகள்அவரை சரியாக நடத்துமாறு உத்தரவிட்டனர்.

இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவைக் காண மதிமுகவினர் தொடர்ந்து வந்து வண்ணம் உள்ளனர். ஆனால், யாரும்வைகோவைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் தொண்டர்கள் மாறி மாறி சிறை வாயிலில் உட்கார்ந்த வண்ணம் உள்ளனர்.

இந் நிலையில் வேலூரர் சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வைகோவைக் காண வருபவர்களை போலீசார் ரகசிய கேரமாக்கள்மூலம் படம் பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதை சிறையில் ராஜிவ் காந்தி கொலையாளியான முருகனும் அடைக்கப்பட்டுள்ளார். வைகோவின் அறைக்கு அருகில் தான் இவரது அறைஉள்ளது.

தனது மகன் சிறை சென்றது குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என வைகோவின் தாயார் மாரிம்மாள் கூறியுள்ளார். ஸ்டார் டிவிநிருபரிடம் பேசிய அவர், எனது மகன் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவது தவறுஇல்லை. அவன் சிறை செல்வது எனக்கு புதிதல்ல. இதில் எனக்கு வருத்தமோ, கவலையோ கிடையாது என்றார்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி உள்பட கோவில்பட்டி, சிவகாசி பகுதியில் பல பஸ்கள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதனால்,இந்தப் பகுதிக்கு இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X