For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாம், வாஜ்பாய், ஜெ, கருணாநிதி இரங்கல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் மறைவுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய், தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுகதலைவர் கருணாநிதி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகாந்தின் மறைவு குறித்து அறிந்தவுடன் மருத்துவமனைக்கு விரைந்த கலாம் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர்நிருபர்களிடம் கூறுகையில், இது ஈடு செய்ய முடியாத ஒரு தலைவரின் இழப்பு. பெரும் அதிரிச்சியான சம்பவம் இது என்றார்.கிருஷ்ணகாந்தின் மனைவி சுமனையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ம்து மருத்துவமனைக்கு வந்து கிருஷ்ண காந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வாஜ்பாய் நிருபர்களிடம் கூறுகையில், காந்தின்மறைவு மூலம் இந்திய அரசியலில் ஒரு நூற்றாண்டே முடிவுக்கு வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது. முதலில் ஆங்கிலேயர்களைஎதிர்த்துப் போராடினார். பின்னர் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடினார்.

நேற்று வரை எங்களுடன் இருந்தவருக்கு இன்று அஞ்சலி செலுத்த வேண்டிய துரதிஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அவரது திடீர் மறைவு எனக்குஅதிர்ச்சி தந்துவிட்டது என்றார்.

ஜெயலலிதா:

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகச் சிறந்த தலைவரை இழந்துவிட்டு நிற்கிறோம். பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் நாட்டுக்கு துணையாக நின்றார். ராஜ்யசபாவை பாரபட்சம் இல்லாமல் நடத்தி அனைத்துக் கட்சியினரின் அன்பைப் பெற்றார்.அவரது குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி:

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளாக ராஜ்யசபாவை மிகத் திறமையாக நடத்தினார்கிருஷ்ணகாந்த். யாருடைய மனமும் கோணாமல் சபையை நடத்தினார். எல்லா கட்சிக்காரர்களையும் பாரபட்சம் இன்றி நடத்திஎல்லோரிடமும் இன்முகத்துடன் பழகியவர்.

அவரது திடீர் மரணம் அதிர்ச்சி தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் இருந்தும் கிருஷ்ணகாந்தின் மறைவுக்கு இரங்கல்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்து கேபினட் அமைச்சர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அனைத்து மாநில கவர்னர்கள், முதல்வர்கள், சட்டமன்றங்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X