For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

த.மா.கா. வழியில் வடிவேலு: கட்சியை உடைத்து காங்.கில் இணைகிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் கட்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணையவுள்ள நிலையில், தமிழக ஐக்கிய ஜனதா தளக் கட்சியும்இணையவுள்ளது. இக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ஜி.ஏ.வடிவேலு தலைமையில் கட்சியின்பெரும்பாலான நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளனர்.

இதற்காக ஐக்கிய ஜனதா தளத்தை இவர்கள் உடைக்கவுள்ளனர்.

அகில இந்திய ஐக்கிய ஜனதாதளத் தலைவராக இருப்பவர் முன்னாள் பிரதமர் தேவகெளடா. துணைத் தலைவராகஇருப்பவர் ஜி.ஏ.வடிவேலு. தமிழக ஜனதாக் கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் வடிவேலு.

தேவகவுடா தலைமையில் ஜனதாதளம் உடைந்தபோது, அவருக்கு ஆதரவாக தமிழக ஐக்கிய ஜனதாதளதலைவராக இருந்தார்.

பின்னர் வடிவேலுவை கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராக்கினார் தேவகெளடா. தமிழக தலைவராகபலராமன் நியமிக்கப்பட்டார். ஆனால் பலராமன் மீது வடிவேலுவுக்கு திருப்தியில்லை.

தனது தீவிர ஆதரவாளர் ஒருவரை தமிழக தலைவராக்குமாறு கவுடாவை வற்புறுத்தி வந்தார் வடிவேலு. ஆனால்அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தார் கவுடா. ஒரு கட்டத்தில் வடிவேலுவின் கோரிக்கையைநிராகரித்து விட்டார் கவுடா.

இதனால் அதிர்ந்து போனார் வடிவேலு.

இந்த அதிருப்தியில் இருந்து வந்த வடிவேலுவுக்கு, காங்கிரஸ் கட்சியில் பல கட்சிகள் படிப்படியாக இணைந்துவருவது கவர்ந்திழுத்துள்ளது. தாமும் பேசாமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடுவது என்ற முடிவுக்குவந்துள்ளார்.

இதையடுத்து சோனியா காந்தியுடன் பேசிய அவர் தமிழக ஜக்கிய ஜனதாதளத்தை உடைத்து காங்கிரஸ் கட்சியில்இணையத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். இதை சோனியாவும் ஏற்றுக் கொண்டார். வடிவேலுக்கு 20க்கும்மேற்பட்ட மாவட்ட தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தனது ஆதரவாளர்களுடன் டெல்லி செல்லும் வடிவேலு, அங்கு சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில்சேருகிறார்.

முன்னதாக மதுரையில் தமாகா இணைப்பு விழாவின்போது வடிவேலுவும் சேரலாம் என்று காங்கிரஸ் தரப்பில்கூறப்பட்டது. ஆனால் கூட்டத்தோடு கூட்டமாக சேருவதில் விருப்பமில்லை என்று வடிவேலு கூறி விட்டதால்,தனியாக அவரது கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைகிறது.

தமாகா இணைப்புக்குப் பிறகு வடிவேலு இணைப்பு இடம் பெறும் என்று தெரிகிறது.

வடிவேலுக்கு தமிழகத்தில் பெரிய அளவில் ஆதரவு ஏதும் இல்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள மிகச் சிலகெளரவமான, ஊழல் செய்யாத தலைவர்களில் அவரும் ஒருவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X