For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவை கலக்கும் இந்தியரின் படம்

By Staff
Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்ஜெல்ஸ்:

Signடைரக்டர் மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கியுள்ள சைன்ஸ் திரைப்படம் வசூலைக் குவிக்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா டாப்10ல் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாண்டிச்சேரியில் பிறந்த மனோஜ் வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் தான். பென்சில்வேனியாவில் வசித்து வருகிறார்.

இவரது சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து வந்த அன்பிரேக்கபிள் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், சைன்ஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

Manojஉலகின் பல்வேறு பகுதிகளில் வயல்வெளிகளில் திடீர் திடீர் என மிகப் பெரிய வட்டக் குறியீடுகள் தோன்றுகின்றன. இந்தக் குறியீடுகளை உருவாக்கியது யார்? இதன் மர்மம் என்ன? இது வெளிகிரகவாசிகளின் செயலா? என்பதை விளக்குவது தான் கதை.

ஷியாமளனின் முந்தைய படங்களும் பேய்கள், அதிசயங்கள், மர்மங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியானவை தான். மெல் கிப்சன் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ள சைன்ஸ் படம் அமெரிக்காவில் வெளியான 2 தினங்களில் 60.3 மில்லியன் டாலரை ஈட்டிவிட்டது.

Sign movieஷியாமளனின் முந்தைய படங்களைவிட இதன் வசூல் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அடுத்த வாரம் இந்தப் படம் வெளியாகிறது.

நியூஸ் வீக் இதழ் இவரை ஸ்டீவன் ஸபீல்ஸ்பெர்குக்கு இணையான கலைஞர் என வர்ணித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X