For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் திமுகவினர் மீது போலீஸ்- அதிமுக கூட்டாக தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கிய திமுகவினரை போலீசார் மிகக் கடுமையாகத் தாக்கினர். இதில் முன்னாள்அமைச்சர் த.கிருட்டிணனின் மண்டை உடைந்தது. கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தது. 50க்கும் மேற்பட்ட திமுகவினர்படுகாயமடைந்தனர்.

கஞ்சியை ரோட்டில் கொட்டிவிட்டு அதிமுகவினரும் போலீசாரும் கடும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்டாலின் வருவதற்கு முன்பே இந்த ரகளை நடந்துவிட்டதால் அவர் அதிமுகவினர் மற்றும்போலீசாரின் தாக்குதலில் இருந்து தப்பினார்.

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் லட்சக்கணக்கான நெசவாளர்கள் குடும்பங்களுடன் பட்டினி கிடக்கும் சூழ்நிலைஉருவாகியுள்ளது.

மதுரையில் செல்லூர் பகுதியில் தறிகளை நம்பி வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான நெசவாளர்களும் உண்ண உணவில்லாமல்பட்டினி கிடக்கின்றனர். இவர்களுக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை திமுக இன்று நடத்தியது.

மக்கள் நெருக்கம் மிகுந்த செல்லூர் 60 அடி சாலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திமுக இளைஞரணித் தலைவர் ஸ்டாலின்கலந்து கொள்வதாக இருந்தார்.

ஏட்டிக்கு போட்டி அதிமுக:

இதற்குப் போட்டியாக அதிமுகவினர் அந்தப் பகுதியில் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். திமுகவினர்மேடை போட்டிருந்த இடத்தின் மிக அருகிலேயே அதிமுகவினருக்கும் நிகழச்சி நடத்த போலீசார் அனுமதி தந்திருந்தனர்.

இதனால் காலை முதலே அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந் நிலையில் முன்னாள் சபாநாயர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்,மதுரை திமுக மேயர் செ.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான த. கிருஷ்ணன் ஆகியோர்நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்களும் குழந்தைகளும் கைகளில் சட்டிகளுடன் இந்தக் கஞ்சி வாங்கக் கூடியிருந்தனர்.

வந்தார் வன்முறை வளர்மதி:

அப்போது முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் செல்லூர் ராஜூ ஆகியோர் தங்கள் ரவுடிக்கும்பல் புடை சூழ அங்கு வந்தனர்.

அவர்களுடன் வந்த கும்பல் கஞ்சி வாங்க நின்றிருந்த பொது மக்களிடம் போய் பிரியாணி சாப்பிட மக்களை அழைத்தனர். ஆனால், அதை பொது மக்கள்கண்டுகொள்ளவில்லை.

இதனால் எரிச்சலடைந்த அதிமுகவினர் திமுகவினரின் மேடையை நோக்கி கற்களை வீசினர். இதற்காகவே அரைபாடி லாரியில் சரளைக் கற்களைஅதிமுகவினர் கொண்டு வந்து குவித்திருந்தனர்.

இதை போலீசார் கண்டும் காணாமல் இருந்தனர். திமுகவினர் மீது அதிமுகவினர் கல்வீச்சு நடத்தியபோது அதிமுகவினரை விரட்டாத போலீசார் அவர்கள்மீது திமுகவினர் பதில் தாக்குதல் நடத்தாத வகையில் அரணாக நின்றனர்.

இதனால் கஞ்சி வாங்க வந்த பொது மக்கள் பயந்துபோய் சிதறி ஓடினர். அதிமுகவினரின் கல்வீச்சில் பல பெண்களின் மண்டை உடைந்தது.

திமுகவினரை சுற்றி வளைத்து...:

தங்கள் மீது அதிமுகவினர் கல்வீசுவதை தடுக்குமாறு போலீசாரிடம் திமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது திமுகவினரை நெருங்கிய போலீசார் திடீரென அவர்கள் மீது சரமாறித் தாக்குதல் நடத்தினர். கஞசி ஊற்றிக் க்ொண்டிருந்த திமுகவினரை போலீசார்லத்திகளைக் கொண்டு அடித்து நொறுக்கினர். இதில் பல திமுகவினரின் மண்டை உடைந்தது.

அப்போது சில போலீசாரும் அதிமுகவினரும் ஏழைகளுக்காகத் தயார் செய்யப்பட்டு பெரிய சட்டிகளில் வைக்கப்படிருந்த கஞ்சியை ரோட்டில் கொட்டிவிட்டுதங்கள் ஒரிஜினல் புத்தியைக் காட்டினர்.

மேடையில் இருந்த திமுகவினரை கையையும் காலையும் பிடித்து இழுத்து மிருகங்களை இழுப்பது போல இழுத்துச் சென்றனர் போலீசார். ஒரு பக்கம் திமுகவினர் மீதுபோலீசார் தடியடி நடத்திக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அதிமுகவினரும் தங்கள் கல்வீச்சையும் தொடர்ந்தனர்.

இதனால் திமுகவினர் இரு புறமும் சிக்கிக் கொண்டனர். போலீசார் நடத்திய தடியடியில் இருந்தும் அதிமுகவினரின் கல்வீச்சில் இருந்தும் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மேயர் ராமச்சந்திரன் ஆகியோரை திமுகவினர் காப்பாற்றி மேட்ைகுப் பின்புறம் கொண்டு சென்றனர்.

கண்ணில் அடித்த போலீஸ்:

ஆனால், முன்னாள் அமைச்சர் த.கிருட்டிணனனை போலீசார் அதற்குள் அடித்து மேடையில் தள்ளிவிட்டனர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம்வழிந்தது. கண்ணில் லத்தி அடித்ததில் அதில் இருந்து ரத்தம வழிந்தது. அரைகுறை மயக்கத்தில் மேடையில் கிடந்த அவரை சில போலீஸ்காரர்கள் கையைப்பிடித்து இழுத்தனர்.

என்னை விடுங்க.. என்னை விடுங்க என அவர் அலறினார். அப்போது அதிமுகவினர் வீசிய கற்களும் அவர் மீது வந்து விழுந்தன.

அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் நின்று கொள்ள அவ்வளவு கூட்டத்திலும் திமுகவினரைத் தேடித் தேடித் தாக்கியது போலீஸ். திமுக தலைமைக் கழகப்பேச்சாளர் சலீமை அதிமுகவினரும் போலீசாரும் சேர்ந்தே அடித்தனர்.

அதே போல மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தர்மலிங்கத்தின் மண்டையையும் போலீசார் உடைத்தனர்.

அராஜகத்துக்கு தலைமை: போலீஸ் கமிஷ்னர்

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் இதுவரை நியாயமான அதிகாரியாகக் கருத்தப்பட்டு வந்த மதுரை போலீஸ் கமிஷ்னர் சூர்யபிரகாஷின் தலைமையில் நடந்ததுதான் கேவலம். அதிமுகவினர் கல்வீச்சைத் தொடங்கியவுடன் அங்கு வந்த அவர் அதிமுகவினரை அடித்து விரட்டுவதை விட்டுவிட்டு கஞ்சி ஊற்றும்திட்டத்தை உடனே கைவிடும்படி திமுகவினரை மிரட்டினார்.

இதன் பின்னர் தான் பிரச்சனை வலுத்தது.

இந்தச் சம்பவத்தைப் படம் பிடித்த பத்திரிக்கை போட்டோகிராபர்களையும் போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். பலபத்திரிக்கையாளர்களும் இந்தத் தாக்குதல் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து அநியாயம் செய்த அதிமுகவினரை விட்டுவிட்டு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், மேயர் ராமசந்திரன், கிருட்டிணன், மாவட்டச்செயலாளர்கள் வேலுச்சாமி, தர்மலிங்கம் உள்பட 150 திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரியாணி விருந்து:

இவ்வளவு அராஜகம் நடந்த முடிந்த பின்னரும் அதிமுகவினரின் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை போலீசாரே முன் நின்று நடத்தினர். அதிமுகவினரால் பிரியாணிசாப்பிட பல்வேறு பகுதிகளில் இருந்து கூலிக்கும் பிரியாணி ஆசை காட்டியும் அழ்ைதது வரப்பட்டவர்கள் அந்த பிரியாணியைத் தின்றனர்.

ஏழை நெசவாளர்கள் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை. அவர்களின் ஒரு நேர கஞ்சியைக் கூட குடிக்கவிடாமல் அதிமுகவினர் கெடுத்துள்ளனர்.அவர்கள் அரசியல் கட்சிக்காரர்கள். எதையும் செய்வார்கள்.

ஆனால், மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் போலீசார் கஞ்சியை ரோட்டில் கொட்டிவிட்டு கேவலமாக நடந்து கொண்டது தான் அதிர்ச்சி தருகிறது.

கலவர பூமி:

இந்தச் சம்பவம் நடந்து முடிந்த பின்னர் அந்தப் பகுதியே கலவர பூமி போல காட்சியளித்தது. கவிழ்ந்து கிடந்த கஞ்சிப் பானைகள், உடைத்து எறியப்பட்டமேடை, சாலைகளில் செருப்புகளுடன் கலந்து கிடந்த கஞ்சி, ரத்தம் ஒட்டிய கற்கள், உடைத்து நொறுக்கப்பட்ட சேர்கள் என அந்தப் பகுதியே வன்முறைக்காடாக காணப்படுகிறது.

இந்த இடத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் தான் செல்லூர் போலீஸ் ஸ்டேசன் உள்ளது. மதுரை வைகை ஆற்றில் சாராயம் காய்ச்சுபவர்களிடம் பணம்வாங்குவது இந்த ஸ்டேசனின் முக்கியக் கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாவிடம் நல்ல பெயருக்காக..

வன்முறையைத் திட்டமிட்டு நடத்திய முன்னாள் அமைச்சர் வளர்மதி கட்சித் தலைவி ஜெயலலிதாவிடம் எப்படியாவது நல்ல பெயர் வாங்கத் துடித்துக்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வன்முறை மூலம் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

வளர்மதியின் தம்பி மீது கொலை கேஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் அமைச்சராக இருந்தபோது ஐ.ஏ.எஸ். அதிகாரியை செருப்பு வாங்கி வர உத்தரவிட்டபெருமைக்குறிய பெண்மணியாவார். மதுரையில் பினாமி பெயரில் பல ஒயின்ஷாப்கள் வைத்துள்ளார்.

அதே போல இவருக்கு உதவியாக செயல்பட்ட செல்லூர் ராஜூவின் மதுரை மாவட்டச் செயலாளர் பதவியும் ஆட்டத்தில் தான் உள்ளது. இவர் மீதுஜெயலலிதாவிடம் மொட்டை பெடிசன் போடப்பட்டுள்ளது. இவர் பதவி காலியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுகவினரைத் தாக்கிஅம்மாவிடம் நல்ல பெயர் வாங்க முயன்றிருக்கிறார்.

அரசியல் போலீஸ்:

இவர்கள் அரசியல்வாதிகள்... போலீசார் ஏன் அரசியல்வாதிளானார்கள் என்பது தான் கேள்வி

இந்தத் தாக்குதல் ஸ்டாலினைக் குறி வைத்து நடத்தப்பட்டதாகத் தான் தெரிகிறது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்துவரும் ஸ்டாலின் அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அவரை அடித்துச் சாய்க்கவே போலீசார் உதவியுடன் இந்தத் தாக்குதலுக்கு அதிமுகவினர் திட்டமிட்டிருந்தாகத் தெரிகிறது. ஆனால், அவரது வருகைதாமதமாகிவிட்டதால் தப்பினார். செல்லூர் நோக்கி வந்த அவரை திமுகவினர் தடுத்து நிறுத்தினர். அங்கு பெரும் கலவரம் நடப்பதை விளக்கிய அவர்கள்நீங்கள் அங்கு போய் நெசவாளர்களை சந்தித்தால் அந்த அப்பாவி நெசவாளர்களையும் கூட அதிமுகவினர் தாக்க வாய்ப்புள்ளது என்றனர்.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்றார் ஸ்டாலின்.

அறுவை சிகிச்சை:

கண்ணில் பலத்த காயமடைந்த த.கிருட்டிணன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல திமுகவினரும் உடலெங்கும் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடைகள் அடைப்பு:

இச் சம்பவத்தையடுத்து மதுரையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து செல்லூர் உள்பட மதுரையின் பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

கமிஷ்னர் பேட்டி:

பின்னர் நிருபர்களிடம் பேசிய போலீஸ் கமிஷ்னர் சூர்யபிரகாஷிடம் நிருபர்கள் சரமாறியாகக் கேள்வி கேட்டனர். ஆனால், அவரிடம் இருந்து மழுப்பல்பதில்கள் தான் கிடைத்தன.

திமுகவினரையும் அதிமுகவினரையும் மிக அருகருகே நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது ஏன் என்று கேட்டபோது, இப்படி ஒவ்வொன்றையும் போய் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று பொறுப்புடன் பதில் தந்தார்.

சில சமூக விரோதிகள் தான் பிரச்சனையை உருவாக்கினர். உடனே கஞ்சி வழங்கும் திட்டத்தை நாங்கள் தடுத்திருக்காவிட்டால்மேலும் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும் என்றார்.

இந்த வன்முறை வெறியாட்டத்தில் பொது மக்களின் கார்கள், பல பைக்குகளும் கூட சேதமடைந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X