For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் த.கிருட்டிணன் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரையில் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்நகரப் போலீஸ் கமிஷனர்சூர்யபிரசாத்தை தற்காலிகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக நிர்வாகக் குழு தீர்மானம்நிறைவேற்றியுள்ளது.

இந் நிலையில் போலீசார் தாக்குதலில் காயமடைந்த முன்னாள் திமுக அமைச்சர் த.கிருட்டிணன் உள்பட 5திமுகவினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பே முன்னாள் சபாநாயகர் பழனிவேல் ராஜன், மேயர்ராமசந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவுகூறத்தக்கது.

கடந்த 9ம் தேதி மதுரையில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில்போலீசார் தடியடி நடத்தினர். அதிமுகவினரும் திமுகவினர் மீது கல்வீசினர். இதில் பல திமுகவினர் பலத்தகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தனது உயிருக்கு குறி வைத்து நடத்தப்பட்டதாக திமுக இளைஞரணித் தலைவர்ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

பெரும் கலவரம் காரணமாக அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். இதனால் அவர் மீதுநடக்க இருந்த தாக்குதலில் இருந்து தப்பினார் என திமுக கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகக் குழு நேற்று அவசரகமாகக் கூடியது. அதில் இந்தத் தாக்குதலைக்கண்டித்து வரும் 19ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பேரணிகள் நடத்துவது என்றுமுடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருச்சியில் நடக்கும் பேரணிக்கு அன்பழகனும், சென்னை பேரணிக்கு ஆற்காடு வீராசாமியும், கடலூர்பேரணிக்கு க.சுந்தரம், தஞ்சாவூர் பேரணிக்கு கோ.சி. மணியும், வேலூர் பேரணிக்கு ஸ்டாலினும், கரூர் பேரணிக்குசுப்புலட்சுமி ஜெகதீசனும் தலைமை வகிக்க உள்ளனர்.

மேலும் அதிமுக அரசின் அடக்குமுறை குறித்து டெல்லியில் அடுத்து பிரதமர் தலைமையில் நடக்கும் தேசியஜனநாயகக் கூட்டணயின் கூட்டத்திலும் பிரச்சனை கிளப்ப திமுக திட்டமிட்டுள்ளது.

அவசர நிர்வாகக் குழுக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில்,

மதுரையில் நெசவாளர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சிக்காக திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் தனித்தனிநாட்களில் போலீசார் அனுமதி அளித்திருக்க வேண்டும்.

ஆனால் இரு கட்சியினருக்கும் ஒரே நாளில், அதிலும் அருகருகிலேயே நிகழ்ச்சியை நடத்த சூர்யபிரசாத் அனுமதிகொடுத்தார். இதனால் தான் பிரச்சனை வெடித்தது.

எனவே சூர்யபிரசாத்தைத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்து விசாரணை நடத்த தமிழக ஆளுநர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

திமுக சார்பில் கஞ்சி வழங்கிய மேடையில் புகுந்து தடியடி நடத்தி முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் உள்ளிட்டதிமுகவினரை அடித்து உதைத்து போலீசார் மிருகத்தனமாக நடந்து கொண்டனர். மேலும் முன்னாள் சபாநாயகர்பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், மதுரை மாநகர மேயர் ராமச்சந்திரன் உள்பட 100க்கும் அதிகமான திமுகவினரையும்போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எதிர்க் கட்சிகள் மீது இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் அதிமுக அரசுஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா தூண்டுகோலாக இருப்பதையும் போலீசார்அதற்குத் துணை போவதையும் திமுக நிர்வாகக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைக் கமிஷனிடமும் திமுக புகார்கொடுக்கும்.

சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து காட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசை மத்திய அரசு வேடிக்கைபார்த்துக் கொண்டிருப்பது சரியில்லை.

தமிழக அரசை மத்திய அரசு எச்சரிக்கலாம். கண்டிக்கலாம். விளக்கமும் கேட்கலாம். மத்திய அரசு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். எங்கள் தீர்மானத்தின் முக்கிய நோக்கமே அது தான்என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X