For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காட்டுமிராண்டி தாக்குதல்: தமிழகம் முழுவதும் போலீசாருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மேலூரில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பல மாணவிகள் உள்படமாணவர்கள் படுகாயமடைந்தனர். பல மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் இந்த வெறித் தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலஇடங்களில் போலீசார் மீது மாணவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பதற்றம்நிலவுகிறது.

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றன. அவர்களது போராட்டத்தின் நியாயத்தை கவனத்தில் கொள்ளாமல் போராட்டத்தை அடக்குவதிலேயே அரசு கவனம் செலுத்திவருகிறது.

போராட்டம் நடத்திய மதுரை மீனாட்சி கல்லூரி மாணவிகளை பெண் போலீசாரை விட்டு தரதரவென இழுத்து வந்து வேனில் அள்ளிப்போட்டது அரசு. அவர்களை ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்துவிட்டு குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அரசுக்கு எதிராக கோஷமா போடுகிறீர்கள் என்று கேட்டு அந்த மாணவிகளை போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.

இந் நிலையில் மேலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது மேலூர்காவல்நிலைய எஸ்.ஐ. ராஜேஷ் அங்கு சென்று பிரச்சனை செய்துள்ளார்.

போராட்டத்தை கைவிடாவிட்டால் தூக்கி உள்ளே போடுவேன் என்று அவர் மிரட்ட கடுப்பான ஒரு மாணவர் போலீஸார் மீது கல்லைவீசினார். இதையடுத்து போலீசார் மிக பயங்கரமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

மாணவர்களை கண்மூடித்தனமாக தடிகளால் தாக்கினர். இதில் மாணவிகளும், பேராசிரியர்களும் கூட மாட்டிக் கொண்டனர். போலீசார்காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதையடுத்து அனைவரும் கல்லூரிக்குள் ஓடினர். பல மாணவர்கள் கம்பி வேலிகளில் ஏறி ஓடினர். இதில்பலரது சட்டை, பேண்டுகள் கிழிந்தன.

உள்ளே ஓடிய மாணவர்களைத் தாக்க போலீசாரும் கல்லூரிக்குள் ஓடி வந்தனர். அவர்களை பேராசிரியர்கள் தடுத்தனர். ஆனால்,அவர்களைப் பிடித்து தள்ளிவிட்டு கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை விரட்டி விரட்டி தாக்கியது போலீஸ் படை.

வகுப்பறைகளுக்கும் நுழைந்த போலீசார் அங்கு மாணவர்களை அடித்தனர். இதில் டேபிள், நாற்காலிகள் உடைந்தன. கல்லூரி அறைகளில்இருந்த பானைகள், விளக்குகளையும் கூட போலீசார் உடைத்தனர்.

வெறி நிரம்பியவர்களாக போலீசார் தாக்கினர். இதையடுத்து மாணவர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் பலபோலீசாரும் காயமடைந்தனர். ஆனால், போலீஸ் தாக்குதலில் பல மாணவர்களின் மண்டை பிளந்தது. மாணவிகளின் கை, கால்கள்உடைந்தன. மாணவிகளை போலீசார் வேண்டுமென்றே விரட்டிச் சென்றனர். சுமார் 35 மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து மேலூர் மட்டுமின்றி மதுரை கல்லூரிகளிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது. போராட்டம் நடத்தினால் அதைபோலீசாரை வைத்து அடித்து கட்டுப்படுத்துவோம் என்ற தமிழக அரசின் பீகார் பாணி அரசியல் மாணவர்களிடையே கடும் கோபத்தைஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கல்வீச்சு...

இந் நிலையில் இன்று சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் போலீசாருக்கு எதிராக பெரும் வன்முறையில் இறங்கினர். காலை கல்லூரிஆரம்பித்தவுடன் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைந்து போக போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து போலீசார் மீது மாணவர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். காலை10 மணியளவில் நடந்த இந்த கல்வீச்சு மற்றும் சாலை மறியலால் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுமார் ஒரு மணி நேரம்அண்ணா சாலையில் இருபுறமும் மைல் கணக்கில் வாகனங்கள் நின்றிருந்தன.

சாலை முழுவதும் கற்கள், செருப்புகள் இறைந்து கிடக்கின்றன.

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் அரசின் முடிவை எதிர்த்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதே போல திருச்சி, கோயம்புத்தூர், கரூர் ஆகிய இடங்களிலும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அங்கும் போலீசாருக்கும்மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மதுரை கல்லூரிகளில் போலீஸ் குவிப்பு

இச் சம்பவத்தால் மதுரையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் அனைத்துக் கல்லூரிகளைச் சுற்றிலும் போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர மீனாட்சி மகளிர் கல்லூரி மாணவிகளிடம் போலீஸார் கடுமையாக நடந்து கொண்டதால் மதுரையில் உள்ள அனைத்துக்கல்லூரிகளிலும் மாணவர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது.

இதையடுத்து மதுரைக் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, வக்ப் வாரியக் கல்லூரி, மன்னர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் முன்போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மாணவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றால் உடனடியாகத் தடுத்து நிறுத்த போலீஸாருக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணை நடத்த இளங்கோவன் கோரிக்கை:

தாக்குதல் நடந்த மேலூர் கல்லூரிக்கு வரும் 8ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. கல்லூரிக்குள் நுழைந்து குறிப்பாகவகுப்பறைகளுக்குள்ளும் நுழைந்து மாணவர்களை போலீசார் தாக்கியிருப்பற்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

மாணவ, மாணவிகள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதல் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கோரியுள்ளார்.

மாணவர்களை வகுப்புகளில் நுழைந்து போலீசார் தாக்கியிருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசும் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.

அதே போல இந்த விவகாரத்தில் மாணவர்களை கைது செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. மாணவர் பிரநிதிகளை அழைத்துப் பேசுவதை விட்டுவிட்டு போலீசாரைக் கொண்டு மிருகத்தனமாக அடிக்கும் செயலைஅரசு நிறுத்த வேண்டும் என அக் கட்சியின் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.

இச் சம்பவத்தால் மதுரையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் அனைத்துக் கல்லூரிகளைச் சுற்றிலும் போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை காமராஜர் மற்றும் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு மிகக் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் டூ தேர்வுக் கட்டணம் கடும் உயர்வு: கல்விக்கு தடை போடும் தமிழக அரசு

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X