For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடும் எதிர்ப்புக்கு இடையே தமிழில் நடந்த கும்பாபிஷேகம்

By Super
Google Oneindia Tamil News

கரூர்: கரூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் உள்ள திருமுக்கூடலூர் கோவிலில் சங்கராச்சாரியார் உள்ளிட்டவர்களின்தடைகளையும் மீறி தமிழிலேயே குட முழுக்கு விழா நடைபெற்றுள்ளது.

சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தமிழிலேயே திருமறைகள் ஓதப்பட்டு கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள்நடைபெற்று வந்தன.

ஆனால் காலப் போக்கில் சமஸ்கிருத ஆதிக்கம் வந்தது. இதனால் கும்பாபிஷேகம், சம்ப்ரோக்ஷணம் முதலியசைவ, வைணவ கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் சமஸ்கிருத வேத மந்திரங்களுடன் தான் நடந்துவருகின்றன.

ஆனால் கரூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருமுக்கூடலூர் சிவன் ஆலயத்தில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழில் குடமுழுக்கு நடத்த தமிழகஅரசே எதிர்ப்புத் தெரிவிக்கும் என இக் கோவில் நிர்வாகிகள் நினைக்கவில்லை.

ஆனால், இந்து சமய அறிநிலையத்துறையின் எதிர்ப்பையும் மீறி அதை நடத்த கோவில் நிர்வாகமும் அந்தக் கிராமமக்களும் முடிவு செய்தனர்.

இந் நிலையில் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தமிழில் குடமுழுக்கு விழா நடத்துவது,இந்து ஆகம விதிகளக்கு மாறானது என்று காஞ்சி மடத்தில் இருந்து எதிர்ப்பு வந்தது.

காஞ்சி மடத்தின் நெருக்குதல் காரணமாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தனது எதிர்ப்பைவலுப்படுத்தியது. தமிழில் விழா நடத்த வேண்டாம் என அறநிலையத்துறை கடிதம் எழுதியதாகவும் தெரிகிறது.

ஆனால் கோவில் நிர்வாகிகள் காஞ்சி மடத்தின் கூற்றை புறக்கணித்தனர். அந்தக் காலத்தில் தமிழில் இந்தவிழாக்கள் நடந்துள்ளன. அதேபோலவே இப்போதும் தமிழில் விழா நடத்துவதில் தவறில்லை என்றுகூறிவிட்டனர்.

இதையடுத்து அந்த ஊரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று (திங்கள்கிழமை) காலை திட்டமிட்டபடி தமிழறிஞர்களும் சிவ பக்தர்களும் மக்கள் முன்னிலையில் அழகானதமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு விழாவை சிறப்புற நடத்தினர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சிவனின் அருளைப் பெற்றனர்.

இந் நிலையில் இந்த விழா நடத்தியதற்கு காஞ்சி சங்கராச்சாரியார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காஞ்சி மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகம முறைப்படி வேத மந்திரங்களை ஓதாமல் இப்படிதமிழில் குடமுழுக்கு நடத்துவதால் எந்தப் பலனும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ் நாட்டில் தமிழில் ஒரு கோவில் குட முழுக்கு விழாவை நடத்த இவ்வளவு எதிர்ப்பு வரும் என்றுநாங்கள் கனவு கூட காணவில்லை. இருந்தாலும் எதிர்ப்புகளை மீறி தமிழ் வென்றுள்ளது என கோவில்நிர்வாகத்தினர் கூறினர்.

கடும் எதிர்ப்புக்கு இடையே தமிழில் நடந்த கும்பாபிஷேகம்

--> Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X