For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்கு அர்ச்சகர்களும் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

கடவுளையும் காஞ்சி சங்கராச்சாரியாரையும் விமர்சித்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழகஅர்ச்சகர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட அர்ச்சகர்கள் சங்க அமைப்பாளரான காமேஸ்வர குருக்கள் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாத்திகம் பேசும் நீங்கள் (கருணாநிதி) தான் கடவுள் நம்பிக்கையே இல்லாதவராயிற்றே? பின்னர் எந்த மொழியில்கடவுள் வழிபாடு நடந்தால் உங்களுக்கென்ன?

வேறு மதத்தில் உள்ளவர்கள் அரவு மற்றும் ஆங்கில மொழிகளில் வழிபாடு செய்யும் போது, அதை தமிழில்செய்யக் கூடாதா என்று நீங்கள் கேட்க முடியுமா? அல்லது கேட்பீர்களா?

தமிழகத்தில் உள்ள அர்ச்சகர்கள் எந்தவிதத்திலும் தமிழுக்கு எதிரிகள் அல்ல. தமிழுக்காக அரும்பாடுபட்டபெரியவர் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு "வீர சோழியம்" என்னும் இலக்கண நூலை அளித்த பெருமை,நம்பியாண்டார் நம்பிக்கு "திருத்தொண்டர் புராணம்" அளித்த பெருமை, சுந்தரமூர்த்தி நயினாருக்கு "தேவாரம்"கொடுத்த பெருமை என்று அனைத்திலும் பெருமை பெற்ற தமிழ் ஆன்மீகப் பெரியவர்கள் அனைவரும்அர்ச்சகர்கள் தான் என்பதை உண்மையான தமிழ் தெரிந்தவர்கள் நன்கு உணர்வார்கள்.

மேலும் பல நூற்றாண்டுகளாக தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ், பல்வேறு விதமான ஆகமநூல்கள் ஆகியவற்றைத் தமிழில் வெளியிட்டு தேனினும் இனிய தமிழ் மூலம் ஆன்மீகத்தை வளர்த்து வருகிறதுகாஞ்சி மடம்.

எனவே இது போன்ற கருத்துக்களை இனிமேலும் தயவு செய்து கூற வேண்டாம் என்று அவ்வறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

""தமிழ் மந்திரம் புரியாத கடவுளை ஏன் வணங்க வேண்டும்?"" - கருணாநிதி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X