For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆயுதங்களை கீழே போட மாட்டோம்: புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

சத்தாஹிப் (தாய்லாந்து):

பேச்சுவார்த்தை தற்போது தான் துவங்கியுள்ள நிலையில் ஆயுதங்களை நாங்கள் கீழே போட மாட்டோம் என்றுவிடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் சத்தாஹிப் கடற்படைத் தளத்தில் நடந்து வந்த புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலானமுதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று முடிவடைந்தன.

மொத்தம் 12 மணி நேரம் வரை முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த மூன்று நாள் பேச்சுவார்த்தையில்பல முக்கியமான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பின் நிருபர்களிடம் இரு தரப்பினரும்கூட்டாகப் பேட்டியளித்தனர். அதன் விவரம்:

சுயாட்சிக்காகப் போராடுவோம்- புலிகள்:

தனி நாடு கேட்டுப் போராட மாட்டோம் என்றும் ஆனால் தமிழர்கள் அடக்கப்பட்டால் அதை எதிர்த்து சுய நிர்ணயஉரிமைக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றும் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம்கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லீம்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்காகவும் தான் தனியான இடம்கேட்கிறோமே தவிர தனி நாடு வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை.

தமிழர்களுக்கென்று தனியான சுயாட்சி உரிமை கிடைக்க வேண்டும் என்று தான் நாங்கள் இவ்வளவு காலமும்போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்கான அரசியல் ரீதியான அங்கீகாரம் தமிழர்களுக்கு அளிக்கப்படவேண்டும்.

0இந்த முழுமையான சுயாட்சி கிடைக்கும் வரையில் புலிகளின் படைகள் வடக்கு பகுதிகளில் தொடர்ந்துபாதுகாப்புப் பணிகளில் ஈடுபடத் தான் செய்வார்கள்.

பேச்சுவார்த்தை இப்போது தான் துவங்கியுள்ள நிலையில் தமிழர்களுக்கு முழுமையான சுயாட்சி கிடைக்கும்வரையிலும் தமிழர் பகுதிகளில் முழு இயல்பு நிலை திரும்பும் வரையிலும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்என்ற பேச்சுக்கும் இடமே இல்லை.

இரு தரப்பிலும் கடற்படையும் உள்ளது. தரைப்படையும் உள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக தற்போது நிரந்தரப்போர்நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமலில் உள்ளது. எனவே ஆயுதங்களைக் கீழே போடுவது குறித்து இப்போதுபேச வேண்டியதில்லை என்றார் பாலசிங்கம்.

கூட்டு நடவடிக்கை குழு:

இதற்கிடையே இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புலிகளும்இலங்கை அரசும் இடம் பெறும் கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்று விரைவில் அமைக்கப்படவுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையிலிருந்து வெளியேறிய சுமார் 16 லட்சம் தமிழர்கள்மற்றும் முஸ்லீம்கள் ஆகியோரை மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த நடவடிக்கைகளை கூட்டு நடவடிக்கைகக் குழு தான் மேற்கொள்ளவுள்ளது. அடுத்த மாத இறுதியில்நடக்கவிருக்கும் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே இந்த கூட்டு நடவடிக்கைக் குழுஅமைக்கப்படும் என்று இரு தரப்பினர் சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் காணாமல் போன தமிழர்கள் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரும் பணியிலும் கூட்டு நடவடிக்கைக்குழு ஈடுபடும்.

மேலும் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் போர்க் கைதிகளை விடுவிக்கும் பணியிலும் இந்த கூட்டுநடவடிக்கைக் குழுவினர் ஈடுபடுவார்கள்.

அக்டோபர் 31ல் 2வது கட்ட பேச்சு:

இந்நிலையில் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தைகள் அக்டோபர் 31 முதல் நவம்பர் 3ம் தேதி வரை நடைபெறும்என்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

மேலும் மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தை டிசம்பர் 2 முதல் 5ம் தேதி வரையும் நான்காவது கட்டப் பேச்சுவார்த்தைஅடுத்த ஆண்டு ஜனவரி 6 முதல் 9ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.

முதற்கட்டப் பேச்சுவார்த்தை தற்போது மூன்று நாட்கள் மட்டுமே நடந்துள்ளன என்பதும் அடுத்து வரும்பேச்சுவார்த்தைகள் ஒவ்வொன்றும் நான்கு நாட்கள் நடைபெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள சுமார் 15 லட்சம் கன்னி வெடிகளைமீட்பதற்காக உலக நாடுகளிடம் கோரிக்கை விடுப்பது குறித்து புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளைபிரபாகரனிடம் பேசிய பிறகே முடிவு செய்யப்படும் என்று இன்று பாலசிங்கம் கூறிவிட்டார்.

இலங்கை அரசும் இதுகுறித்து ராணுவத்திடம் பேசிய பிறகே முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்து விட்டது.

"திருப்தியளிக்கும் பேச்சு":

இதற்கிடையே நிருபர்களிடம் பேசிய இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரான ஜி.எல். பெய்ரிஸ்,பேச்சுவார்த்தை தாங்கள் எதிர்பார்த்ததை விட திருப்தி அளிக்கும் விதமாகவே சென்று கொண்டிருப்பதாகவும்பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

பேச்சுவார்த்தையின் போது தங்களுடன் மிகவும் நட்பு ரீதியிலும் நெருக்கமாகவும் புலிகள் பழகினர் என்றுபெய்ரிஸ் கூறிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்த பாலசிங்கம் எங்களுடைய இந்த நெருக்கம் அமைதிப்பேச்சுவார்த்தையை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவும் என்றும் கூறினார்.

தமிழர் பகுதிகளில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து ஆரம்பகட்ட பேச்சுக்கள் மட்டுமே நடந்துள்ளன.இதைப் பற்றி இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று இருவரும் தெரிவித்தனர். அங்கு ஏற்கனவே புலிகள்சிறப்பான ஆட்சியைத் தான் நடத்திக் கொண்டிக்கின்றனர் என்று அப்போது பாலசிங்கம் தெரிவித்தார்.

அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் உதவி செய்ய முன் வந்துள்ளவர்களும் இதே வேகத்துடன் செயல்பட்டுஉதவினால் நிலைமை இன்னும் வேகமாகச் சீரடையும் என்றும் அவர்கள் இருவரும் கூறினர்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அயராது பாடுபட்ட நார்வே தூதுக்குழுவினரும் முதற்கட்ட தாய்லாந்து பேச்சுகுறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். புலிகளும் இலங்கை அரசும் சிறப்பான தொடக்கத்தைஏற்படுத்தியுள்ளதாக நார்வே தூதுக்குழுவின் தலைவரும் அந்நாட்டு வெளியுறவுத்துறை இணை அமைச்சருமானவிதார் ஹெல்கெசன் கூறினார்.

புதிதாக அமைக்கப்படவுள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவினர் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையின் பகுதிகளில்வாழும் முஸ்லீம்களின் நலன் குறித்தும் ஆராய்வார்கள் என்றும் ஹெல்கெசன் கூறினார்.

இந்தியா முழு ஆதரவு:

இதற்கிடையே இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா 100 சதவீதம் ஆதரவளித்து வருகிறது என்றும்பெய்ரிஸ் கூறினார்.

தற்போது நடைபெற்று வரும பேச்சுவார்த்தைக்கு இந்தியா தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் உதவியின்றி நாங்கள் இவ்வளவு தூரம் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கமுடியாது என்று நார்வே வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை செல்கிறார் பாலசிங்கம்:

இதற்கிடையே புலிகள் தரப்பிலான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரும் புலிகளின் அரசியல் ஆலோசகருமானஆன்டன் பாலசிங்கம் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு முன் இலங்கையின் வடகிழக்குப் பகுதிக்குச்செல்லவுள்ளார்.

அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு முன் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்து பல முக்கியஅரசியல் பிரச்சனைகள் குறித்து பாலசிங்கம் விவாதிக்கவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X