For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலூர் முதல் பெங்களூர் வரை...

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை அருகே மேலூரில் பிறந்த இமாம் அலியின் வாழ்க்கை பெங்களூரில் பரிதாபமாக முடிந்துள்ளது.

எலக்ட்ரானிக் டிப்ளமோ படித்த இமாம் அலி, பார்ப்பதற்கு அமைதியானவனாக இருந்தாலும் பயங்கரதிட்டங்களுடன் நடமாடி வந்துள்ளான்.

மேலூர் சந்தைப் பேட்டையைச் சேர்ந்த ஹலீத் என்பவரின் மகன்தான் இமாம் அலி. சிறு வயது முதலே தீவிரமானஎண்ணத்தைக் கொண்டவராக இருந்த இமாம் அலி பின்னர் அல் உம்மாவில் இணைந்தான். இவனுக்கு பழனிபாபாஎன்ற பேச்சாளர் மதரீதியில் தூண்டுதலாக இருந்துள்ளார்.

1992ம் ஆண்டுதான் அவரது பெயர் பெரிய அளவில் தமிழகத்தில் பேசப்பட்டது. மதுரை அருகே உள்ளதிருவாதவூர் என்ற பகுதியில் மலைகளில் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் சோதனைகளில் அவர்ஈடுபட்டிருந்தபோது போலீஸாரிடம் பிடிபட்டான்.

அதற்குப் பிறகு அவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பினான். பின்னர் 1993ம் ஆண்டு சென்னை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்தான்.

அந்த வழக்கில் 1995ம் ஆண்டுதான் அவர் போலீஸாரிடம் சிக்கினான். அதன் பின்னர் போலீஸ் பிடியிலிருந்துதப்பினான்.

குண்டுகள் தயாரிப்பதில் கில்லாடியான இமாம் அலி பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயில் பயிற்சி பெற்றுள்ளான். பின்னர்டாக்காவில் வெடிகுண்டுகள் தயாரிப்பில் பயிற்சி பெற்றுள்ளான்.

மொத்தம் 4 முறை போலீஸ் பிடியிலிருந்து தப்பியுள்ளான் இமாம் அலி. 92ல் திருவாதவூர் போலீஸிடமிருந்துதப்பினான். ஆனால் மேலூர் அருகே பொதுமக்கள் அவனைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அதே ஆண்டு, மதுரை மதிச்சியம் பகுதியில் போலீஸ் பிடியிலிருந்து தப்பினான். பின்னர் 1995ம் ஆண்டு போலீஸ்பிடியிலிருந்து தப்பினான்.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக மதுரை திருமங்கலத்தில் போலீஸ் பிடியிலிருந்து அவனும், ஹைதர் அலியும்தப்பிய சம்பவம் அமைந்தது. அதில் ஹைதர் அலி பிடிபட்டு விட்டான். ஆனால் இமாம் அலி கடைசி வரைசிக்கவில்லை.

இறுதியில் அவனது வாழ்க்கை பெங்களூரில் முடிந்துள்ளது.

S a] ސР( •u-96;uܟ )

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X