For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். ஏவுகணை சோதனை: இந்தியாவும் பதில் சோதனை

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

அணுகுண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த "ஹத்ப்-4" என்று அழைக்கப்படும் "ஷஹீன்" ரக ஏவுகணையைபாகிஸ்தான் இன்று சோதனை செய்து பார்த்தது. இதற்குப் பதிலடியாக இந்தியாவும் இன்று தன்னுடைய "ஆகாஷ்"ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.

இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளிடமும் அறிவித்து விட்டுத் தான் தரையிலிருந்து தரை சென்றுதாக்கவல்ல "ஷஹீன்" ஏவுகணையைப் பாகிஸ்தான் பரிசோதனை செய்தது.

இந்த ஏவுகணை சுமார் 750 கி.மீ. தொலைவுக்குச் சென்று தாக்க வல்லது. பாகிஸ்தானிலிருந்து டெல்லி உள்ளிட்டபல வடமேற்கு இந்திய நகரங்களை ஹத்ப் ஏவுகணையால் தாக்கி அழிக்க முடியும்.

"ஹத்ப்-4" ஏவுகணையைத் தவிர "ஹத்ப்-5" மற்றும் "அப்தாலி" (ஹத்ப்-2) போன்ற பல தரப்பட்ட ஏவுகணைகளையும்கடந்த மூன்று நாட்களில் பாகிஸ்தான் சோதித்துப் பார்த்துள்ளது.

மூன்று நாட்களுக்கு முன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தலைமை அலுவலகத்திற்கு அந்நாட்டுராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் சென்றிருந்த போது தான் ஏவுகணை சோதனை நடத்த வேண்டும்என்று முடிவு செய்யப்பட்டது.

இது வழக்கமாக நடைபெறும் ஒரு சோதனை தான் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரானபிரிகேடியர் சலாத் ராஸா தெரிவித்தார்.

கடந்த மே மாதம் தான் அணுகுண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த மற்றொரு ஏவுகணையான "கெளரி"ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதனை செய்தது நினைவிருக்கலாம்.

எல்லாம் "கார்பன் காப்பிகள்"- ரஷ்யா:

இதற்கிடையே பாகிஸ்தானின் ஏவுகணைகளான "கெளரி"யும் "ஷஹீனு"ம் வடகொரியா மற்றும் சீனாவின் "கார்பன்காப்பிகள்" தான் என்று ரஷ்யா கேலி செய்துள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ஏதோ தானே இந்த ஏவுகணைகளைத் தயாரித்தது போல பாகிஸ்தான் உலக நாடுகளிடம் காட்டிக்கொண்டிருக்கிறது.

ஆனால் பாகிஸ்தானின் பெரும்பாலான ஏவுகணைகள் அனைத்தும் வடகொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின்தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை தான் என்றார் அவர்.

இந்தியா பதிலடி சோதனை:

இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த ஏவுகணை சோதனைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும்தன்னுடைய "ஆகாஷ்" ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிப் பரிசோதித்தது.

ஒரிசா மாநிலத்தின் சந்திப்பூர் கடல் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சோதனை நடைபெற்றது.

தரையிலிருந்து கிளம்பி வானில் பறக்கும் எதிரியின் பல விமானங்களை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்தது இந்த "ஆகாஷ்" ஏவுகணை.

சுமார் 25 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட "ஆகாஷ்" ஏவுகணைஇதற்கு முன்பே பல முறை பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

"பாகிஸ்தானின் பொறுப்பற்ற செயல்":

இந்நிலையில் பாகிஸ்தானின் ஏவுகணைச் சோதனைகள் அந்நாட்டின் பொறுப்பற்ற செயலையே காட்டுகின்றனஎன்று இந்திய வெளியுறத்துறை செயலாளரான கன்வல் சிபல் கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான நிருபமா ராவ் கூறும் போது, அந்நாட்டில் விரைவில்நடைபெறவுள்ள தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே முஷாரப் இதுபோன்ற ஏவுகணை சோதனைகளை நடத்திவேடிக்கை காண்பிக்கிறார் என்றார்.

வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்ட கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதுபோன்ற ஏவுகணைகளைச்சோதனை செய்வதில் கண்டுகொள்வதற்கு ஒன்றுமே இல்லை என்றும் கன்வல் சிபல், நிருபமா ராவ் ஆகியஇருவருமே கூறினர்.

தற்போது காஷ்மீரில் நடந்து வரும் பலகட்டத் தேர்தலின் போது கடந்த சில நாட்களில் நூற்றுக்கணக்கானபாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனைநடத்தியிருப்பதும் இந்தியா அதற்குப் பதிலடி கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X