For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நன்றி கெட்ட ரஜினியே...: பாரதிராஜா மீண்டும் கடும் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாட்டின் உப்பைத் தின்று, தண்ணீர் குடித்துள்ள ரஜினி போன்றவர்கள் வெற்றிலை, பாக்கு வைத்துஅழைக்காமல் தாங்களாகவே நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டுபோராட்டத்தை வாபஸ் பெற கூறுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை என இயக்குனர் பாரதிராஜாகூறியுள்ளார்.

இந்த நெய்வேலி போராட்டத்துக்கு திமுக, மதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மைசூர், மாண்டியாவில் தினசரி தமிழகத்துக்கு எதிராக வன்முறையும், கலவரமும் தலைவிரித்தாடி வருகிறது.தமிழக வாகனங்களைத் தாக்குவது, தமிழர் கடைகளை அடித்து நொறுக்குவது என பல சம்பவங்கள் நடந்துவருகின்றன.

இந் நிலையில் தமிழர்களுக்காக, தமிழகத்துக்காக யாராவது குரல்கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம்தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தான் திரையுலகினர் அறிவித்த நெய்வேலி முற்றுகைப் போராட்டம் மக்கள் மத்தியில் அமோகவரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனால், தனது ரசிகர்கள் கூட எதிர்பாராத வகையில் நடிகர் ரஜினி காந்த், இந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்புதெரிவித்துள்ளார். இது தேவையில்லாத போராட்டம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து நேற்றிரவு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டஅனைவரும் ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.

இதில் நடிகர்கள் சத்தியராஜ், பார்த்திபன், நெப்போலியன், வடிவேலு, ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன், நாசர்,எஸ்.வி.சேகர், மயில்சாமி, நடிகைகள் ரேவதி, ஸ்ரீபிரியா, இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.வி. உதயகுமார்,பாலுமகேந்திரா, சித்ரா லட்சுமணன், கஸ்தூர் ராஜா, வி.சேகர், மனோபாலா, மு.களஞ்சியம், வி.சி.குகநாதன்,செல்வராஜ், சீமான்

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இப்ராகிம் ராவுத்தர், தயாரிப்பாளர்களான கோவை தம்பி, ஏ.எல்.அழகப்பன்,ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய்தீன், முரளீதன், நந்தகோபால் செட்டியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பல இயக்குனர்களும், படத் தயாரிப்பாளர்களும் இவரைப் போய் வளர்த்துவிட்டோமே என்று கண் கலங்கியபடி பேசினர்.

நன்றி மறந்தவர் என்று சில நடிகர்கள் விமர்சித்துள்ளனர். சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் ரஜினியை மிகக்கடுமையான தாக்கிப் பேசினர்.

அவரது படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வினியோகஸ்தர்களும் அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்புகொடுக்கக் கூடாது என்று திரையரங்க உரிமையாளர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்தனர்.

அவரைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் பெரும்பாலான கலைஞர்கள் வற்புறுத்தினர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் இயக்குனர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

உச்ச நீதமன்றத்தை கேவலப்படுத்தி வருகிறது கர்நாடகம். இன்றும் கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த சில மணிநேரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்று கூறுகிறார் அம் மாநில முதல்வர். கர்நாடகத்தின் செயல்கள்அது தனி நாடோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்துக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்தை ரஜினி போன்றவர்கள் பரந்த மனதோடு கண்டிக்கலாமே.அப்போது இவருக்கு இந்தியன் என்ற உணர்வு எங்கே போனது? தமிழகத்தை கண்டிக்க மட்டும்இந்தியனாகிவிடுகிறார்.

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் கர்நாடகத்தைக் கண்டிக்க வாயில்லாத இவர் தன்னை ஒரு தமிழன் என்றுஎப்படிக் கூறிக் கொள்ளலாம்?

நெய்வேலியில் நடக்கப் போவது தமிழ்ச் சமுதாயத்தின் பேரணி. இது சினிமாகாரன் மட்டும் நடத்தும் பேரணிஅல்ல. நாங்கள் முன் நிற்கிறோம், அவ்வளவு தான்.

திரையுலகக் கலைஞர்களால் திட்டமிடப்பட்ட இந்தப் பேரணி இப்போது விஸ்வரூபமெடுத்து தமிழ் இனத்தின்பேரணியாக, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் அடையாளப் பேரணியாக உருவெடுத்துள்ளது.

இது இனிமேல் எங்கள் இனம் சம்பந்தப்பட்டது. இன உணர்வுள்ள ஒவ்வொருவரும் இதில் கலந்து கொள்ளவேண்டும்.

இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வெட்கமில்லாமல் கூறுகிறார் ஒரு நடிகர். இது மறு பரிசீலனைசெய்யக் கூடி விஷயமா? தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?

முன்பு கர்நாடகத்தில் தமிழகத்துக்கு எதிராக நடந்த, இப்போதும் நடந்து கொண்டிருக்கிற போராட்டங்களை இவர்மறு பரிசீலனை செய்யச் சொன்னாரா? அவர்களிடம் தமிழகத்துக்காக பேசினாரா? பேசியிருந்தால் நாங்களும் மறுபரிசீலனை செய்யத் தயாராக இருந்திருப்போம்.

பெங்களூரில் தமிழ்த் தாய் பொம்மையை எட்டு பேர் சேர்ந்து கத்தியால் குத்தியபடி ஊர்வலம் சென்றார்கள். அதைஅம் மாநில சினிமாக்காரன் வரவேற்கிறான். அதை இவர் கண்டித்தாரா, மறு பரிசீலனை செய்யச் சொன்னாரா?

இது உனக்கும் (ரஜினி), எனக்கும் உள்ள பிரச்சினை என்றால் மறு பரிசீலனை செய்யத் தயார். ஆனால் இது எங்கள்தமிழ் இனத்தின் பிரச்சினை. இதைப் போய் மறுபரிசீலனை செய்யச் சொல்பவரை எந்த ரகத்தில் சேர்ப்பது?

மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் உப்பைத் தின்று விட்டு, தண்ணீர் குடித்து, இங்கேயை வாழ்க்கை நடத்தி குப்பை கொட்டி வரும்ரஜினி போன்றவர்கள் அழைப்பு இல்லாமலேயே, தாங்களாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

இது வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. இன உணர்வும், வாழ வைத்த தமிழன் மீதானநன்றி விசுவாசத்தாலும் உந்தப்பட்டு வந்தவர்கள் இவர்கள். அந்த நன்றி உணர்ச்சி ரஜினிக்கும் இல்லை.

இன்று நடந்த இந்தக் கூட்டத்துக்கு வந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்காமல்தாங்களாகவே வந்திருப்பவர்கள். தமிழர்களின் உழைப்பில் பிழைக்கிறோம் என்ற நாகரீகம் தெரிந்தவர்கள்தாங்களாகவே வர வேண்டும்.

பிரதமரை இவர் பார்த்து என்ன ஆகிவிடப் போகிறது. இவரிடம் அப்படி என்ன பெரிய சக்தி மறைந்திருக்கிறது?

நாங்கள் நடத்தும் போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெறும். இதில் ரஜினி காந்த் போன்ற தனிமைப்படுத்தப்பட்டதனி மனிதனின் வாதம், பேச்சு எடுபடாது. அவர் யார் தமிழ் பேரணியைத் தடுக்க?

அவரால் என்ன செய்து விட முடியும்? என்று ஆவேசமாகக் கேட்டார் பாரதிராஜா.

நிருபர்களிடம் பேசிய சத்தியராஜ், கர்நாடகத்தில் உள்ள நடிகன் தனது மாநிலத்துக்காக போராடுகிறான்.தமிழ்நாட்டில் உள்ளவன தமிழனுக்காக போராடித் தானே ஆக வேண்டும். இந்த நியாயத்தை புரிந்து கொண்டுரஜினியும் எங்களுடன் சேர்ந்து போராட வருவார் என்று நம்புகிறேன் என்றார்.

இப் போராட்டத்திற்குப் பிறகு ரஜினி காந்த் குறித்து முக்கிய முடிவு எடுக்க தமிழ் திரையுலகம் திட்டமிட்டிருப்பதாகஇயக்குனர் பாரதிராஜாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன.

இந் நிலையில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று தெரிவித்தார். அதேபோல மதிமுகவும் ஆதரவு தெரிவிப்பதாக அக் கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் கூறினார்.

போராட்டத்தை நடத்தக் கூடாது என்று கூறிய ரஜினியை கணேசன் மிகக் கடுமையாகக் கண்டித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X