For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். எல்லையிலிருந்து இந்திய படைகள் வாபஸ்?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படைகளை திரும்ப அழைத்துக் கொள்ள தேசியப்பாதுகாப்பு ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதை இன்று மாலை கூடவுள்ள மத்தியஅமைச்சரவையின் பாதுகாப்புக் குழுவும் ஏற்றுக் கொண்டால் தான் படைகள் வாபஸ் பெறப்படும்.

கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல்நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது. இரு பகுதிகளிலும் படைகள் குவிக்கப்பட்டன.

அதன் பின்னர் சிறிது பதற்றம் தணிந்தாலும், கடந்த மே மாதம் காஷ்மீரில் உள்ள ராணுவக் குடியிருப்பில்பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில மீண்டும் பதற்றம் அதிகரித்தது.

எந்த நேரம் வேண்டுமானாலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்கும் என்ற சூழ்நிலைதான் நிலவியது. ஆனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தலைவர்கள் இரு நாடுகளுக்கும் வந்து பேச்சுநடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் பதற்றம் தணிந்தது.

இதற்கிடையே ஒரு சில பயங்கரவாத சம்பவங்களுடன் காஷ்மீர் தேர்தலும் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ளது.காஷ்மீர் தேர்தல் குறித்து உலக நாடுகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

இருந்தாலும் பாகிஸ்தான் எல்லை வழியாக தொடர்ந்து தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்பிக் கொண்டுதான்உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சவார்த்தையோ,எல்லையிலிருந்து படைகள் வாபஸோ கிடையாது என்று இந்தியா பலமுறை கூறி வந்துள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் தேர்தல் அமைதியாக முடிவடைந்ததைத் தொடர்ந்து எல்லையிலிருந்து படைகளை வாபஸ்பெற்றுக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது.

அதன்படி இன்று பிற்பகலில் கூடிய தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுஎடுக்கப்பட்டது.

காஷ்மீரில் தேர்தல்கள் முடிவடைந்து விட்டதால் இனியும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நம் படையினரைவைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் இந்தியப் படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்என்று இக்கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, வெளியுறவுத்துறைஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா,முப்படைத் தளபதிகள், உளவுத்துறை தலைவர் கே.பி. சிங், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.வி.ரங்கநாதனும், அப்பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.பி.மாலிக்கும் விளக்கினர். மொத்தம் ஏழு லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

காஷ்மீரில் தேர்தலும் முடிந்து விட்டதால் அங்கு தொடர்ந்து படை வீரர்களை வைத்திருப்பதால் வீண் செலவு தான்என்பதால் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று இந்தக் கூட்டத்தில்பரிந்துரைக்கப்பட்டது.

படைகள் வாபஸ் பெறப்பட்டால் ஆயிரக்கணக்கான வீரர்கள் நீண்ட நாட்கள் கழித்து விடுமுறை எடுத்துக் கொண்டுசொந்த ஊருக்கு மகிழ்ச்சியோடு செல்லவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் வழக்கமான பயிற்சிகளில்கவனம் செலுத்துவார்கள்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்குஉதவிய படை வீரர்களுக்கு இந்தக் கூட்டத்தில் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் இந்தப் பரிந்துரையை இன்று மாலை நடைபெறவுள்ள மத்தியஅமைச்சரவையின் பாதுகாப்புக் குழுவும் ஏற்றுக் கொண்ட பின்னர் தான் எல்லையில் குவிந்துள்ள இந்தியப்படைகள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கலாமா என்பது குறித்தும் மத்திய அமைச்சரவையின்பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆக்ராவில் வாஜ்பாயும்பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பும் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது என்பதுநினைவிருக்கலாம்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X