For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியாவை விமர்சிப்பதா?- வி.எச்.பி. தலைவர் மீது காங்கிரஸ் கோபம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக் குறைவாக விமர்சித்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன்தொகாடியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கோரிக்கை விடுத்தள்ளது.

""கடந்த சில மாதங்களாக குஜராத் ஹிந்துக்களைப் பற்றி சிலர் தரக் குறைவாகப் பேசி வருகின்றனர். அவர்களைச்சேர்ந்தவர்களும் அது போலவே பேசி வருகின்றனர். ஒரு நாய் குரைத்தால் அது எதற்காகக் குரைக்கிறது என்றேதெரியாமல் மற்ற நாய்களும் குரைக்கும் என்ற "நாய் மனோபாவம்" போலத் தான் இது இருக்கிறது"" என்றுசமீபத்தில் தொகாடியா கூறியிருந்தார்.

சோனியாவைத் தான் அவர் இவ்வாறு கூறுவதாக காங்கிரஸ் கொதித்து எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழககாங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் இணைந்துவெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

சோனியா காந்தியை தொகாடியா மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதை தமிழக காங்கிரஸ் கட்சிவன்மையாகக் கண்டிக்கிறது.

சோனியா குறித்து கருத்துக் கூறியதற்காக தொகாடியா உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் வாஜ்பாய், தொகாடியா மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வீரமணி கடும் கண்டனம்

இதற்கிடையே தொகாடியாவுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணியும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ஒருவரை விமர்சனம் செய்வதில் தவறில்லை.

ஆனால் அது நாகரீகமான முறையில், ஆரோக்கியமான வகையில் இருக்க வேண்டும். ஆனால் தொகாடியாஎல்லை தாண்டி விட்டார், தரம் தாழ்ந்து விட்டார்.

தனது கருத்தை அவர் வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற நபர்களுக்கு மக்கள் தக்கசமயத்தில் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று கூறியுள்ளார் வீரமணி.

தொகாடியா மறுப்பு

இதற்கிடையே இன்று மதுரையில் நிருபர்களிடம் தொகாடியா பேசுகையில்,

நான் சோனியாவைப் பற்றியோ வேறு எந்த தனி நபரைப் பற்றியோ விமர்சனம் செய்யவில்லை. பொதுவாகத்தான் கூறினேன்.

நான் அவ்வாறு கூறியது குற்றமுள்ள காங்கிரஸ்காரர்களின் மனத்தைக் குறுகுறுக்கச் செய்திருந்தால் அதற்கு நான்ஒன்றும் செய்ய முடியாது என்றார் தொகாடியா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X