For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பராசக்தி வசனத்தை சொல்லி சங்கராச்சாரியாருக்கு கருணாநிதி கடும் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

தமிழக அரசு கொண்டு வந்துள்ள மதமாற்ற தடுப்புச் சட்டத்தை எதிர்க்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காஞ்சிசங்கராச்சாரியார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சங்கராச்சாரியாருக்கு கருணாநிதியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத மாற்றத் தடைச் சட்டம் குறித்து சென்னையில் விளக்கக் கூட்டம் நடத்தப் போவதாக காஞ்சி சங்கராச்சாரியார்ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.

சங்கராச்சாரியார் பேட்டி:

காஞ்சிபுரத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம், கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு எதிராகத்தான். இப்போது இந்தசட்டத்தைப் பார்த்து எல்லோரும் பயப்படத் தேவையில்லை. பயப்படுகிறவர்கள் தவறு செய்கிறவர்களாகத்தான்இருக்க முடியும்.

கட்டாயமாக மதம் மாற்றவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். இந்த சட்டம் குறித்து பொதுமக்களிடம்விளக்குவதற்காக வருகிற 31ம் தேதி மாலையில் சென்னை கடற்கரையில், விளக்கக் கூட்டம் நடக்கிறது. நான்தலைமை தாங்குகிறேன்.

அனைத்து மடாதிபதிகள், இந்து மத அமைப்பினர் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதி இப்படித்தான்....

தனது வசதிக்கேற்க இந்து மதத்தை தூக்கி எறிவது கருணாநிதியின் வழக்கம். தேர்தல் நேரத்தில் திருவாரூரில் தேர்விட்டேன் என்பார், கும்பாபிஷேகங்கள் நடத்தி ஓட்டு வாங்க முயல்வார். அப்புறம் மதத்தை எதிர்த்துப் பேசுவார்என்றார் சங்கராச்சாரியார்.

கருணாநிதி பதிலடி:

இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வர மத்தியஅரசுக்கு நெருக்குதல் வந்து கொண்டுள்ளது. யார் இந்த நெருக்குதலைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியும். அப்படிப்பட்டசட்டம் கொண்டு வர மத்திய அரசை திமுக ஒருபோதும் அனுமதிக்காது.

தான் நடத்தப் போகும் மத மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் அனைத்து ஜாதிச் சங்கங்களும் குறிப்பாக அம்பேத்கர் வழியைப் பின்பற்றும் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் சங்கராச்சாரியார்.

பிறந்த மதத்தில் தலித்துகளுக்கு நடைபெறும் கொடுமைகள், அவர்களது சுயமரியாதைக்கு ஏற்பட்ட களங்கம் இதையெல்லாம் பொறுக்கமுடியாமல் தான் அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறினார். இப்போது அம்பேத்கரின் வழியைப் பின்பற்றுபவர்களை தனது மதமாற்ற எதிர்ப்புக மாநாட்டுக்கு வரச் சொல்லி அழைக்கிறார் சங்கராச்சாரியார். இதன் மூலம் அம்பேத்கரையே கேலி செய்கிறார்சங்கராச்சாரியார்.

சொன்னது நானல்ல..

மத மாற்றத் தடை எதிர்ப்பு மாநாட்டில் பேசிய நான் இந்துக்களை ஏதோ நான் தான் திருடன் என்று வர்ணித்துவிட்டதாக சங்கராச்சாரியார்திசை திருப்பும் பேச்சு பேசுகிறார். அதை நான் சொல்லவில்லை. சங்கராச்சாரியார் போன்றவர்களுக்கு மிகவும் பழக்கமான வாரணாசியில்இருந்து வரும் ஒரு இந்து விஸ்கோஷ் என்ற (இந்து என்சைக்ளோபீடியா) ஏட்டில் தான் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

வாரணாசி நாகரி பிரச்சாரிணி சபா என்ற மத்திய அரசின் நிதி உதவி பெறும் இந்து மத அமைப்பு வெளியிட்டுள்ளஎன்சைக்ளோபீடியாவில் தான் இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்த விளக்கம் எனக்கே ஏற்புடையேதல்ல, அதனால் தான் இந்துவைதிருடன் என்று சொல்ல விரும்பவவில்லை, இதயத்தைத் திருடியவன் என்று சொல்வே விரும்புகிறேன் என்று அந்தக் கூட்டத்தில் தெள்ளத்தெளிவாக பேசியிருந்தேன்.

ஆனால், அதில் தங்களுக்கு வேண்டிய பகுதியை எடிட் செய்துவிட்டு நான் ஏதோ திருடன் என்று கூறிவிட்டது மாதிரி என் மீது பொறிந்துதள்ளியிருக்கிறார் சங்கராச்சாரியார்.

அந்த என்சைக்ளோபீடியாவில், இந்து என்பதற்கு கொடுமைக்காரன் என்றும் அடிமை வேலையாள் என்றும் கொள்ளைக்காரன் என்றும்அர்த்தம் தரப்பட்டிருக்கிறது. இந்தியில் சொல்வதானால் காபிர், குலாம், லூட்டேரா என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. இந்த வாரணாசிஅமைப்பு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையிடம் நிதியுதவி பெற்று வருகிறது.

இதைத் தான் நான் அநத்க் கூட்டத்திலேயே குறிப்பிட்டேன். திருடன் என்ற சொல் தவறு என்றேன். அதை உள்ளத்தைக்கொள்ளையடித்தவன் என்று பொருள் கொள்ளவே விரும்புகிறேன் என்றேன்.

ஆனால், இதையெல்லாம் முழுமையாகப் படிக்காத சங்கராச்சாரியார் இப்போது என்னைப் பார்த்து தேர்தல் நேரத்தில் கருணாநிதி கோவில்கும்பாபிஷேகம் செய்வார் என்று வம்பிழுக்கிறார்.

கொடியவர்களின் கூடாரம் ஆகக் கூடாது..

இப்போது சொல்கிறேன், கோவில் கூடாது என்பதல்ல.. கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பது தான் என்கருத்து. இதை 50 ஆண்டுகளுக்கு முன்பே பராசக்தியில் சொன்னவன் நான்.

சில ஆண்டுகளுக்கு முன் நான் மருத்துவமனையில் இருந்தபோது இதே சங்கராச்சாரியார் தான் நான் கடவுளிடம் வேண்டி கருணாநிதியைபடுக்கையில் படுக்க வைத்துவிட்டேன் என்று துறவிகளுக்கே விலக்கான விசுவாமித்திர கோபத்துடன் பேசினார்.

இப்போதும் அப்படியே பேசியிருக்கிறார்.

மறைந்த மகான் காஞ்சிப் பெரியவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு, கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் கூடஅவர் ஒரு கண்ணியவான்.

என்னைப் பொறுத்தவரை தமிழில் குடமுழுக்கு நடத்துவதை ஆதரிக்கிறேன். தலித்துகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்க்கிறேன். இந்த இரு விஷயங்களில் எந்தக் காரணம் கொண்டும் பின் வாங்க மாட்டான் இந்தக் கருணாநிதி.

இதற்கு மேல் சங்கராச்சாரியாருக்கு விளக்கம் தர நான் விரும்பவில்லை, அது தேவையும் இல்லை.

இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதிக்கு எதிராகவும் சங்கராச்சாரியாருக்கு ஆதரவாகவும் இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன், பா.ஜ.க. தலைவர்இல.கணேசன் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இல கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழுத்த அரசியல்வாதியான கருணாநிதி அறியாமை காரணமாக முதிர்ச்சியில்லாமல்பேசியுள்ளதாக கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X