For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் பெய்து வரும் அடை மழை காரணமாக நேற்று வரலாறு காணாத அளவுக்கு போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரின் பலபகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. லட்சக்கணக்கான குடிசைகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக சென்னையின்முக்கிய சாலையான அண்ணா சாலையில் வியாழக்கிழமை மாலைமுதல் வெள்ளிக்கிழமை வரையிலும் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் அடை மழை காரணமாக நகரின் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது. இதில் இரு சக்கரவாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் மழை நீரில் சிக்கி செயலிழந்து விட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் வந்ததால், நெரிசல் அதிகமானது.

இந்த வாகன தேக்கம் அனுமார் வால் போல அண்ணாசாலையைத் தொடர்ந்து என்.எஸ்.சி. போஸ் சாலை வரைநீடித்தது. விடிய விடிய வாகனங்கள் சாலையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து போலீஸார் உரிய நேரத்தில் வரத் தவறியதாலும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாலும் பொதுமக்கள்சொல்லொனா துயரத்தில் ஆழ்ந்தனர்.

அண்ணா சாலையில் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் தான் தெரிந்தன. வாகனத்தையும் ஓட்ட முடியாமல் மழையில்இருந்தும் ஒதுங்க முடியாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டனர்.

தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வருவதற்கு நேற்று 3 மணி நேரம் பிடித்தது. இதுதவிர தீபாவளிக்காககடைக்குப் போய் விட்டு வந்த மக்கள் பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் நள்ளிரவு தாண்டியும் பஸ்ஸ்டாப்களில் ஆயிரக்கணக்கில் நின்று கொண்டிருந்தனர்.

நடந்து மட்டுமே போக முடியும் என்ற சூழ்நிலையால் பெண்களும், குழந்தைகளும் இரவில், கொட்டும் மழையில்நடந்து செல்ல இயலாமல் அப்படியே ஸ்டாப்களில் முடங்கிக் கிடந்தனர்.

அண்ணா சாலை தவிர நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சர்தார் படேல் சாலைஉள்ளிட்ட முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வேகமாய் நிரம்பி வரும் தமிழக அணைக் கட்டுகள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X