ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மாபெரும் உதவி
டெல்லி:சர்வதேச உணவுத் திட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 40,000 டன் கோதுமையை வழங்க உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இவ்வளவு பெரிய உதவியை உலகில் எந்த நாடும் இதுவரை செய்தது இல்லை.
இந்த கோதுமையை அதிக காலரி சக்தி மிக்க பிஸ்கெட்டுகளாக மாற்றி இந்தியா அனுப்ப உள்ளது. இதன்படி 40,000 டன் கோதுமையும்9,526 டன் பிஸ்கெட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த உணவு ஈரானின் பந்தார் அப்பாஸ் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளது. பாகிஸ்தான் மீதானவான்வெளியை இந்தியா பயன்படுத்த விரும்பாததால் ஈரானுக்கு கப்பல் மூலம் இதை அனுப்பி அங்கிருந்து தரை வழியேஆப்கானிஸ்தானுக்கு அனுப்புகிறது.
மாத இறுதியில் இந்த உணவு ஆப்கானிஸ்தானைப் போய்ச் சேரும் என சர்வேச உணவுத் திட்டத்தின் துணைத் தலைவர் ஜெரால்ட் டெலிகூறினார். ரம்ஸான் மாதத்தில் இந்த மிகப் பெரிய உதவியை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா செய்துள்ளதாக அவர் கூறினார்.
கோதுமையை பிஸ்கெட்டுகளாக மாற்றும் பணியில் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிகப் பெரிய தொழிற்சாலைகள்ஈடுபட்டுள்ளன.
பிஸ்கெட் தவிர மேலும் பெரும் அளவு கோதுமையை மாவாக மாற்றி ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளது.
-->


