For Daily Alerts
Just In
திமுகவுடன் மதிமுக இணையாது: கண்ணப்பன்
வேலூர்:
திமுகவுடன், மதிமுக இணையும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன் கூறினார்.
வேலூர் மத்திய சிறையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி, வைகோவை சந்தித்து உடல் நலம் மட்டுமே விசாரித்தார். இருவரும் இலக்கியம்குறித்து விவாதித்தனர்.
கட்சிகளின் இணைப்பு குறித்தோ, வேறு அரசியல் விவகாரங்கள் குறித்தோ இருவரும் பேசவில்லை. எனவேதிமுகவுடன் மதிமுக இணைகிறது என்ற கேள்விக்கே இடமில்லை என்றார் கண்ணப்பன்.
-->


