For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதவாதப் பிரச்சாரம் செய்தால் தண்டிக்க வேண்டும்: லிங்டோ

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மதவாதத்தைத் தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஜே.எம்.லிங்டோ கூறினார்.

பத்திரிக்கையாளர் கரண் தாப்பர் ஹிந்தித் தொலைக்காட்சியில் நடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்கூறியதாவது:

குஜராத்தில் தேர்தல் விதிமுறைகளை மிகக் கடுமையாக அமலாக்கப்படும். ஆனால், குஜராத்தில் தொடர்ந்து மதக் கலவத்தைத்தூண்டும் வகையில் சிலர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுஅவசியம். அதை தேர்தல் கமிஷன் நிச்சயம் செய்யும் என்றார்.

மதவாதத்தைத் தூண்டுவது போல பேசுவது விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவா? என்று கரண் தாப்பர்கேட்டபோது. பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால், பலரும் இந்தச் செயலை செய்து வருகின்றனர் என லிங்டோபதிலளித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், அதே போல குஜராத்தில் அமைதியாகத் தேர்தல் நடத்த 400 கம்பெனி மத்தியப் படைகளைக்(40,000 படைகள்) கேட்டோம். இதைத் தர முடியாது என உள்துறை அமைச்சகம் மறுத்தது. இப்போது அப் பிரச்சனைதீர்க்கப்பட்டுவிட்டது.

பாதுகாப்பை பலப்படுத்தினால் சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க வருவார்கள் என்று கருதுகிறேன். என்னை கிருஸ்தவன்,காங்கிரஸ் ஏஜென்ட், இத்தாலிய ஏஜென்ட் என்று சிலர் முட்டாள்தனமாக பேசி வருகின்றனர். எனக்கு மதமே கிடையாது. இதுபோன்ற பேச்சுக்களால் எனது கடமையை தடுத்துவிட முடியாது.

மதக் கலவரத்தைத் தூண்டு வகையில் வைக்கப்பட்டுள்ள எல்லா தேர்தல் பிரச்சார விளம்பரங்களையும் அகற்றஉத்தரவிட்டுள்ளோம்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களிலும், மாநிலத்தை விட்டு வெளியிலும் வாழ்ந்து வரும் சிறுபான்மையின மக்கள்வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றார்.

பா.ஜ.க, வி.எச்.பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளால் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் தேர்தல் கமிஷ்னர்லிங்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

Sᶵz -70; Ea }vࠓ B

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X