For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்க்கஸ் கோமாளியும் அமைச்சரவை மாற்றமும்: கருணாநிதி கிண்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக ஆட்சியில் கடந்த 18 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நீக்கப்பட்டு, சேர்க்கப்பட்டுள்ளதாகதிமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சர்க்கஸ் கூடாரத்தில் நாயகனும், நாயகியும் பங்கேற்று அற்புதமான, ஆச்சரியம் விளைவிக்கக் கூடிய, ஆபத்துநிறைந்த ஆட்டங்களில் ஈடுபடுவார்கள்.

கூடாரத்தின் உச்சியில் கயிற்றால் ஆன ஊஞ்சல்கள் கட்டி தொலைவில் உள்ள மற்றொரு ஊஞ்சலுக்குத் தாவிப்பாய்ந்திடுவார்கள்.

அப்படிப் பாயும் போது அந்தரத்தில் பாய்ந்து வரும் வீரர் அல்லது வீராங்கனையின் கை அல்லது காலைப் பற்றிக்கொண்டு மற்றொரு ஊஞ்சலுக்குத் தாவுவார்கள்.

வேறு சில வீரர்கள் நீண்ட கம்பியில் சைக்கிள் சவாரி செய்து கொண்டிருப்பார்கள். கையில் 20 பந்துகளை வைத்துக்கொண்டு ஒன்றைக் கூட கீழே தவற விடாமல் அவற்றை வீசி மாறி மாறி கைகளில் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.நெருப்பு வளையத்துக்குள் நுழைந்து உடலில் தீக்காயமே படாமல் லாவகமாக வளைந்து வெளியே வருவார்கள்.

இந்த அபாயச் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் போதே, பார்வையாளர்களின் கவனத்தைத் திசை திருப்பும்வகையில் சர்க்கஸ் விதூஷகர் (கோமாளி) ஒருவர் வருவார்.

அவரும் அந்த வீரர்களைப் போலவே செய்ய முயன்று கம்பியிலிருந்து கீழே விழுந்தோ, பந்துகளைத் தவறவிட்டோ, சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளிடமிருந்து தப்பி ஓடியோ பார்வையாளர்கள் மத்தியில்சிரிப்பலையை ஏற்படுத்துவார் அவர். இதை நாமும் கண்டிருக்கிறோம்.

இந்த சர்க்கஸ் விதூஷகத் தனத்தை சர்க்காரிலும் காண இயலும் என்பதற்கு அதிமுக அரசு தான் சிறந்த உதாரணம்.கடந்த 18 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்பட்டும், சேர்க்கப்பட்டும், நீக்கப்பட்டும்வந்துள்ளனர்.

இந்த ஒன்றரை ஆண்டுகளில் இது போன்ற சர்க்கஸ் நிகழ்ச்சிகள் பல கேலிக் கூத்துகளுக்கிடையே வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.

அமைச்சர்களை நீக்குவதும், புதிதாக நியமிப்பதும், நீக்கியவரை மீண்டும் சேர்ப்பதும், சேர்த்தவரைத் தூக்கி எறிந்துபந்தாடுவதும் முதல்வருக்கே உரிய உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது, தட்டிக் கேட்கவும் இயலாது.

அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் உரிமையாக இருக்கலாம். இருப்பினும், காரண காரியங்களேஇல்லாமல் அதை செய்வது சரியாக இருக்காது.

சிலர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்கள். மிகுந்த பிரயத்தனத்திற்குப் பிறகு அவர்கள் பெற்றுள்ளஅமைச்சர் பதவியைக் காப்பதில் தான் இனி கவனம் செலுத்துவார்களே தவிர மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதுகுறித்து நினைக்க அவர்களுக்கு நேரம் இருக்காது என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X