For Daily Alerts
Just In
பழையன கழிதலும்...: 6, 9, 10ம் வகுப்பு பாடங்கள் மாறுகின்றன
சென்னை:
வரும் கல்வியாண்டு முதல் 6,9 மற்றும் 10ம் வகுப்புப் பாடத் திட்டங்களில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
6 மற்றும் 9ம் வகுப்புப் பாடங்கள் அனைத்தும் திருத்தப்பட்டு வருகின்றன.
10ம் வகுப்பு தமிழ்ப் பாடத் திட்டமும் மாற்றப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கு புதிய புத்தகங்கள் வரும்கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும்.
மாநில அரசின் பாடத்திட்டத்தை கடைப்பிடித்து வரும் பள்ளிகளில் இந்தப் புதிய பாடத் திட்டம்அமல்படுத்தப்படும்.
அதேபோல, 2004ம் ஆண்டு முதல் 7, 10 மற்றும் 11ம் வகுப்புப் பாடத் திட்டங்களை முழுமையாக மாற்றியமைக்கபள்ளிக் கல்வி இயக்குனரகம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 2005ம் ஆண்டு முதல் 8 மற்றும் 12ம் வகுப்பு பாடத் திட்டங்களை மாற்றவும்பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


