For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ஆசியாவின் பெரிய பஸ் நிலையம்: நாளை திறப்பு விழா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னைப் புறநகர்ப் பகுதியான கோயம்பேட்டில் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புறநகர் வெளியூர் பஸ்நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார்.

இதையொட்டி பஸ்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்திற்குத்தான் இனிமேல் வெளியூர் பஸ்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவை வந்து செல்ல வேண்டும்.

நாளை முதல் இந்த மாற்றம் அமல்படுத்தப்படும். எந்த பஸ்கள் எந்த வழியாக வந்து செல்ல வேண்டும் என்பதுஅறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பஸ்கள்:

அதன்படி, தென் மாவட்டங்களிலிருந்து வரும் அரசு போக்குவரத்து மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகபஸ்கள் ஜவஹர்லால் நேரு சிலை, உள் வட்டப் பாதை, நெசப்பாக்கம் சாலை வழியாக கோயம்பேடு வரவேண்டும், போக வேண்டும்.

மேற்கு நோக்கிச் செல்லும் அரசு போக்குவரத்துக் கழக மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்கள், பிறமாநிலப் பஸ்கள் கோயம்பேடு மார்க்கெட் சாலை, நெசப்பாக்கம் சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.

வடக்குநோக்கி செல்லும் பஸ்கள் உள் வட்டப் பாதை, கோயம்பேடு ரவுண்டானா, தேசிய நெடுஞ்சாலை-4,கோயம்பேடு மார்க்கெட் சாலை, நெசப்பாக்கம் சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.

ஆம்னி பஸ்கள்:

அது போலவே தென் மாவட்டங்களுக்கு வந்து செல்லும் ஆம்னி பஸ்கள், பிற சுற்றுலா வாகனங்கள் தேசியநெடுஞ்சாலை-45, தாம்பரம் இரும்புலியூர் புது பாலம், பைபாஸ் சாலை, தேசிய நெடுஞ்சாலை-4, மதுரவாயல்,கோயம்பேடு மார்க்கெட் சாலை, நெசப்பாக்கம் சாலை வழியாக கோயம்பேடு வர வேண்டும்.

மேற்கு நோக்கி செல்லும் பஸ்கள், தேசிய நெடுஞ்சாலை-4, கோயம்பேடு மார்க்கெட் சாலை, நெசப்பாக்கம் சாலைவழியாக வந்து செல்ல வேண்டும்.

வடக்கு நோக்கி செல்லும் பஸ்கள், தேசிய நெடுஞ்சாலை-5, உள் வட்டப் பாதை, கோயம்பேடு ரவுண்டானா,தேசிய நெடுஞ்சாலை-4, கோயம்பேடு மார்க்கெட் சாலை, நெசப்பாக்கம் சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.

ஜவஹர்லால் நேரு சிலையிலிருந்து வீல்ஸ் இண்டியா சந்திப்பு வரையிலான தூரத்திற்கு தினசரி காலை 8 மணி முதல்இரவு 8 மணி வரை கனரக சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் குறையுமா?

சென்னை நகரில் வெளியூர் பஸ்கள், ஆம்னி பஸ்களினால் அதிக அளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுஅடிக்கடி பெரும் பிரச்சினை ஏற்படுவது வழக்கம்.

இதையடுத்து தான் கோயம்பேடு பகுதியில் மார்க்கெட் வளாகத்தை ஒட்டி புதிய வெளியூர் பஸ் நிலையத்தைஅமைக்க முடிவாகி ரூ.103 கோடி செலவில் தற்போது புதிய பஸ் நிலையம் உருவாகியுள்ளது.

இந்த பஸ் நிலையம் செயல்படத் தொடங்கியதும், வெளியூர் பஸ்கள் அனைத்தும் தாம்பரத்திற்கு முன்பாகவேதிருப்பி விடப்பட்டு நேரடியாக கோயம்பேடு சென்று விடும்.

அதேபோல அங்கிருந்து புறப்பட்டு பைபாஸ் சாலை வழியாகவே பஸ்கள் வெளியூர்களுக்குச் செல்லும். நகருக்குள்ஒரு பஸ் கூட வராது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சென்னை நகருக்குள் இனி போக்குவரத்து பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவின் பெரிய பஸ் நிலையம்:

ஆசியாவிலேயே மிகப் பெரிய பஸ் நிலையமாக கோயம்பேடு பஸ் நிலையம் கருதப்படுகிறது.

இங்கு ஒரு நாளைக்கு 4,000 பேருந்துகள் வந்து செல்லும் வசதி உள்ளது. தினசரி சுமார் ஒரு லட்சம் பயணிகள்இந்தப் பஸ் நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பஸ் நிலையத்தில் சகல வசதிகளும் உள்ளன.

இங்கிருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் இணைப்பு பஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதுதவிர டாக்சிகள், கால் டாக்சிகள், ஆட்டோக்கள் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

P uUS v {ut;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X