For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டைத் தேடி வரும் கல்வி: இனி எல்லாம் அஞ்சல் மயம்...

By Staff
Google Oneindia Tamil News

சென்னை - மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தனது தொலைதூரக் கல்வித் திட்டத்தின் (கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்) மூலம்எம்.எஸ்சி. இயற்பியல் மற்றும் வேதியியல் படிப்புகளைத் தொடங்க உள்ளது.

அதே போல சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைழகம் பி.எல். சட்டப் படிப்பை அஞ்சல் வழியில் தொடங்கஉள்ளது.

மதுரையில் காமராஜர் பலகலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொன்னுசாமி இன்று நிருபர்களிடம்பேசுகையில்,

வரும் கல்வி ஆண்டு (2002-03) எங்கள் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் முதுநிலைஇயற்பியல் மற்றும் வேதியியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இந்தப் படிப்புகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான மாணவ-மாணவிகளே சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அறிவியல் ஆய்வு தொடர்பான படிப்புகள் எங்கள் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி முறையில்நடத்தப்படுவது இது தான் முதல் முறையாகும்.

இந்தக் கல்விக்கு ஆய்வக வசதி மிக மிக முக்கியம். எனவே, அந்தந்தப் பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்டகல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வசதி செய்யப்படும்.

நாடு முழுவதும் உள்ள எங்கள் பல்கலைக்கழகத்தின் 44 தகவல் மையங்களின் (டிஸ்டன்ட் எஜீகேசன்ஸ் செல்)மூலமாகவே இனி மாணவ-மாணவிகள் தங்களுடைய பட்டச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ்கள், ஹால்டிக்கெட்டுகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் தகவல் மையங்களின் தேசிய அளவிலான ஒரு கூட்டம் வரும் டிசம்பர் 1ம் தேதி ஹைதராபாத்தில்நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு யோசனைகளைக் கூறலாம்.

மேலும் வளைகுடா நாடுகளில் ஐந்து இடங்களிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் புதிதாக தகவல்மையங்களைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இதனால் அதிகபயன்களைப் பெறுவார்கள் என்றார் பொன்னுசாமி.

சட்டக் கல்வியும் அஞ்சல் வழியில்...

இதற்கிடையே தமிழகத்தில் அஞ்சல் வழி சட்டக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னையில் உள்ளடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இந்த அஞ்சல் வழிக் கல்வித் திட்டத்தை தொடங்கவுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட ஐந்தாண்டு பி.எல்.ஹானர்ஸ் பட்டப் படிப்புஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த படிப்புக்கான சிறப்புப் பள்ளியை இன்று முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். அப்போது அவர்பேசுகையில், அஞ்சல் வழியில் முதன்முறையாக சட்டக் கல்வி போதிக்கப்பட உள்ளது. சட்டக் கல்வி தொடர்பானடிப்ளமோ கோர்ஸ் ஒன்றையும் பல்கலைக்கழகம் தொடங்கும் என்றார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆதிசேஷன், சட்ட அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர்கள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X