For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உருப்படியான திட்டத்தை எதிர்ப்பதில் திமுக- அதிமுக கூட்டணி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

சென்னை, வேலூரை விட்டால் தமிழகத்தில் உள்ள உருப்படியான பெரிய மருத்துவமனைகளில் ஒன்று மதுரையில்உள்ள அரசு ராஜாஜி மருத்துவனை. தென் மாவட்டங்களில் உள்ள ஏழை- எளியவர்களுக்கு முக்கிய சிகிச்சைகள்பெற ராஜாஜி மருத்துவமனை தான் ஒரே வழி.

இந்த மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 9,000 பேர் வெளி நோயாளிகளாகவும் சராசரியாக 2,500 பேர் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போவதால்மருத்துவமனையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. விரிவாக்கம் செய்யும் வளாகத்தில் நவீன இருதய.சிறுநீரக, மூளையியல் மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிதியும் கூடஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் எந்த இடத்தில் இதை விரிவாக்குவது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் தொடங்கும் இந்த மருத்துமனை கிட்டதட்ட அரை கி.மீ. நீள வளாகத்தில் அமைந்துள்ளது.இதன் எதிரே தான் மதுரை மருத்துவக் கல்லூரி உள்ளது.

இந்த மருத்துவமனையின் மிக அருகே தான் அண்ணா பேருந்து நிலையமும் உள்ளது. இப்போது இந்த பேருந்து நிலையம்மூடப்பட்டுவிட்டது. மதுரையில் பெரியார், ஆரப்பாளையம், பழங்காநத்தம், அண்ணா என நான்கு பேருந்து நிலையங்கள்இருந்தன.

இப்போது மேலூர் சாலையில் மிகப் பெரிய மாட்டுத்தவணி பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுவிட்டதால் பெரியார் தவிர மற்றபேருந்து நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.

இதனால் அண்ணா பேருந்து நிலையமும் காலியாகி இப்போது சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட மட்டுமே பயன்பட்டு வருகிறது.அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மிக அருகில் இந்த இடம் உள்ளதால் மருத்துவமனையை விரிவாக்க இந்த பேருந்து நிலையஇடத்தை பயன்படுத்தலாம் என்று யோசனை எழுந்துள்ளது.

இது மிகவும் உருப்படியான யோசனையும் கூட. அரசு மருத்துவமனையின் மிக அருகிலேயே இருப்பதால் இதை நிர்வகிப்பதுஎளிது. மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளும் ஒரே இடத்தில் இருந்தால் நோயாளிகளுக்கும் வசதி. எதிரே மருத்துவக்கல்லூரி உள்ளதால் அந்த மாணவர்களுக்கும் இது வசதியாக இருக்கும்.

ஆனால், நல்ல விஷயங்களை எப்போதும் ஆதரிக்கக் கூடாது என்பதில் நமது அரசியல்வாதிகளை விஞ்ச ஆள் உண்டா?

காலியாகக் கிடக்கும் அண்ணா பேருந்து நிலைய இடத்தை மருத்துமனைக்கு ஒதுக்கக் கூடாது என்று கொடி பிடித்துள்ளனர் திமுகமற்றும் அதிமுகவினர்.

இந்த இடத்தை மருத்துவமனைக்கு ஒதுக்குவது குறித்து மாநகராட்சியின் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் இன்றுமாநகராட்சியின் மேயர் கார்த்திக் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர்கள் இந்த இடத்தைமருத்துவமனைக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுகவை எப்போதும் எதிர்க்கும் திமுக கவுன்சிலர்களும் அவர்களின் கருத்தை ஆதரித்தனர்.

அண்ணா பேருந்து நிலையம் இயங்கி வந்த காலத்தில் அதை வைத்து கோடிக்கணக்கில் பணம் பார்த்தவர்கள் இந்த திமுகவினரும்அதிமுகவினரும். பேருந்து நிலையத்தில் கடைகளை ஏலம் விடுவது, வாகனங்கள் நிறுத்த ஸ்டாண்டை ஏலம் விடுவது என பலவகைகளில் இதில் பெரும் பார்த்தவர்கள் இவர்கள்.

இப்போது பேருந்து நிலையம் காலியாவிட்டதால் இவர்களின் வரும்படியும் காலியாகிவிட்டது. இந்த இடத்தில் எதிர்காலத்தில்எப்படியாவது மீண்டும் பேருந்து நிலையத்தை கொண்டு வந்துவிடலாம் என்பது இவர்களது திட்டம். பேருந்து நிலையம்இல்லாவிட்டால் மாநகராட்சியின் சார்பில் மார்க்கெட்டையாவது இப் பகுதியில் தொடங்க வைத்து அதிலும் கடை ஏலம் மூலம்துட்டு பார்ப்பது இவர்களது எண்ணம்.

இதனால் தான் இந்த இடத்தை மருத்துவமனைக்குத் ஒதுக்க இவர்கள் விரும்பவில்லை. இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்குஇவர்கள் கூறிய காரணம் தான் சிரிப்பை வரவழைத்தது. திமுக கவுன்சிலர்கள் கூறுகையில், "பல கோடி ரூபாய்செலவில் உருவாக்கப்பட்ட அண்ணா பஸ் நிலையத்தை மருத்துவமனைக்கு ஏன் தர வேண்டும்?" என்றார்.

"மதுரை மாநகராட்சிக்கென்று சொந்தமான ஒரே பெரிய இடம் அண்ணா பஸ் நிலையம் மட்டும் தான். அதையும்ஏன் மருத்துவமனைக்குத் தர வேண்டும். இது அதிமுக கவுன்சிலர்களின் வாதம்.

இந்த இரு கட்சியினருமே உலகத் தமிழ் சங்கம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தையோ அல்லது ஆரப்பாளையம்பகுதியிலோ மருத்துவமனை விரிவாக்கத்துக்கு ஒதுக்கலாம் என்றனர். ஆரம்பாளையம் பகுதி மருத்துவமனையில்இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த திராவிட கட்சிகளின் கருத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பியான மோகன் எதிர்த்தார்.மருத்துவமனையை விரிவுபடுத்துவதால் ஏராளமான நோயாளிகள் பயன் பெறுவார்கள் என்று கூறிய அவர்நிலத்தை ஒதுக்கலாம் என்றார்.

இறுதியில் பேசிய மதுரை மாநராட்சி கமிஷனர் ஏ. கார்த்திக், இது தொடர்பாக நல்வாழ்வுத்துறை செயலாளரையும்உயர் அதிகாரிகளையும் கலந்து ஆலோசித்த பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்.

மருத்துவமனையை விரிவாக்க 3.5 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வேண்டும் என்று கூறிய அரசு மருத்துவமனையின்டீன் டாக்டர் பாலகிருஷ்ணன் முதலில் அண்ணா பஸ்ஸ்டாண்ட் நிலம் தான் வேண்டும் என்றார்.

ஆனால், அதிமுக, திமுக என எதிரெதிர் துருவங்களும் ஒன்று சேர்ந்து இத் திட்டத்தை எதிர்த்ததால் தனது நிலையில்இருந்து பின் வாங்கிவிட்டார்.

5 ஏக்கர் நிலத்தை எங்கு ஒதுக்கினாலும் சரி என்று கூறிவிட்டு கூட்டத்தை விட்டுக் கிளம்பினார்.

கமிஷன் அடிப்பது, டெண்டர் விடுவது, கடைகள் ஏலம் இப்படிப்பட்ட விஷயங்களில் அதிமுக, திமுகவினர் இடையே எப்போதும்எந்தக் கருத்து வேறுபாடுமே வருவது கிடையாது. மக்கள் பிரச்சனையைக் கூட ஒதுக்கி எறிந்துவிட்டு இது போன்ற விஷயங்களில்கைகோர்த்துக் கொள்வதில் இவர்கள் வெட்கப்படுவதே கிடையாது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X