For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தலைவர்களை கொல்ல சதி: மசூதியின் இமாம் உள்பட 3 தீவிரவாதிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தமிழகத்தில் மேலும் பல இஸ்லாமிய தீவிரவாதிகள் கைதாகியுள்ளனர். ஒரு மசூதியின் இமாமும் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர்களிடம் இருந்து வெடிமருந்துகளும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீவிரவாதிகளுக்குபாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது.

இவர்கள் முக்கியத் தலைவர்களைக் கொல்லவும், கோவில்களில் தாக்குதல் நடத்தவும், தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்திகலவரத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதையொட்டி தமிழகத்தில் குண்டுவெடிப்புகளை நடத்தவும் மதக் கலவரததைத் தூண்டவும் 20பேர் கொண்ட கும்பல் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசை எச்சரித்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் 10 தீவிரவாதிகள் சிக்கிவிட்டனர். மற்ற 10 பேரும் தலைமறைவாகினர்.

இஸ்லாமிய பாதுகாப்புப் படை:

இதில் சென்னையில் பிடிபட்ட ஜக்காரியா என்ற அபு மற்றும் தவூபிக் ஆகிய இரு தீவிரவாதிகள் தந்த தகவலின்படி தஞ்சாவூரில் 3பேர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் இஸ்லாமிய பாதுகாப்புப் படை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்தெரியவந்தது.

இந்த இஸ்லாமிய பாதுகாப்புப் படைக்கு பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலியின் மைத்துனர் தான் அபுஹசன் என்பவர் தான் தலைவராக உள்ளதாகவும் தெரிகிறது. இவருக்கு சவுதியில் இருந்து பணம் வருகிறது.

இதையடுத்து ஜக்கரியாவையும் தவூபிக்கையும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். அங்குஇவர்கள் சொன்ன விவரத்தை வைத்து அதிராமபட்டினத்தில் மசூதியில் தங்கியிருந்த இமாம் வலியுல்லாவை நேற்று நள்ளிரவில்போலீசார் கைது செய்தனர்.

மசூதியின் கதவை இரவில் தட்டிய சிறப்புப் போலீஸ் படை வெளியே வந்த இமாம் வலியுல்லாவைக் கைது செய்தது.

அவர் தவிர அருகில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த காதர், நிஜாமுதீன் ஆகிய மேலும் 2 தீவிரவாதிகளையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

சவுதி அரேபிய கோடீஸ்வரனின் உதவி:

இவர்கள் சிக்க காரணமாக இருந்த ஜக்காரியா மற்றும் தவூபிக் ஆகிய இருவரும் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம்தெரிவித்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர் விஜய்குமார் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், கிட்டத்தட்ட 25 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பது இவர்களிடம் நடத்திய விசாரணையில்தெரியவந்தது. இவர்களுக்கு சவுதி அரேபியாவில் இருந்து தான் பணம் வந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் இவர்கள் ரகசியகூட்டம் போட்டுள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கலந்து கொண்டு திட்டங்கள் தீட்டினர். பின்னர் தமிழகம்முழுவதும் பரவினர்.

பிடிபட்ட இந்த இருவரும் அதிராமபட்டிணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் தவூபிக்குக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அங்குநடந்த கொலையிலும் தொடர்பு உண்டு. ஆனால், தப்பி சவுதி அரேபியாவுக்கு ஓடிவிட்டான். அந்தக் கொலையில் தொடர்புடையமேலும் இம்ரான் என்பவனை சவுதிக்கு தப்ப வைத்துவிட்டான். இம்ரான் இப்போதும் அங்கு தான் இருக்கிறான்.

கலவரத்தைத் தூண்டத் திட்டம்:

இப்போது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக சவுதியில் இருந்து வந்துள்ளான் தவூபிக். இவர்கள் குண்டு வைப்பது,கோவில்களைத் தாக்குவது மற்றும் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தி ஆங்காங்கே மத, ஜாதிக் கலவரத்தைத் தூண்டவும்திட்டமிட்டிருந்தனர்.

புதிதாக உருவாகியுள்ள இஸ்லாமிய பாதுகாப்புப் படைக்கு இமாம் அலியின் உறவினர் தான் தலைவராக உள்ளார்.

பாக். தீவிரவாதிகளுடன் தொடர்பு:

இப்போது தமிழகத்தில் ஊடுருவி உள்ள தீவிரவாதிகளுக்கும் ஆந்திராவில் சாய்பாபா கோவிலில் குண்டு வைத்ததீவிரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்களுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு தான் பயிற்சியும் ஆயுதங்களும்வழங்கியுள்ளது. என்றார் விஜய்குமார்.

தஞ்சாவூர் கோவிலுக்கு பாதுகாப்பு:

3 தீவிரவாதிகள் தஞ்சாவூரில் பிடிபட்டதால் தஞ்சை பெரிய கோவிலுக்கு மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும்தஞ்சாவூர் பஸ் நிலையம் மற்றும் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிடிபட்ட 3 தீவிரவாதிகளும் தஞ்சாவூர் அருகே உள்ள சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுவருகின்றனர். இதனால் அங்கு பெரும பரபரப்பு நிலவுகிறது. அங்கு ஆயுத போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வைகுண்ட ஏகாதேசி: ஸ்ரீரங்கத்தில் கண்காணிப்பு

அதே தஞ்சை அருகே உள்ளதால் போல திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும்ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை முதல் 20 நாள் வைகுண்ட ஏகாதேசி திருவிழா தொடங்குகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானபக்தர்கள் இங்கு வர உள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி கோவில் மீது தீவிரவாதிகள் தாக்கலாம் என்று அஞ்சப்படுவதால் கோவிலின் ஒரு வழியை மட்டும்பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி 10 புறக் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களையும் சோதனையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காயல்பட்டிணத்தில் அதிரடி சோதனை:

இது தவிர தூத்துகுடி மாவட்டம் காயல்பட்டிணத்திலும் நேற்று இரவு பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும்சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. அங்குள்ள மசூதி, இஸ்லாமிய கல்வி நிலையங்கள் மற்றும் சில வீடுகளிலும் நேற்று இரவுதிடீர் சோகனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

காயல்பட்டனத்தின் அரபிக் கல்லூரி ஒன்றின் முதல்வர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடியில் சிலர் கைது:

இஸ்லாமிய பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய சிலரை வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலும் போலீசார் கைதுசெய்துள்ளனர். இதில் உஸ்மான் என்ற நபரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நக்சல்கள் தொல்லையுடன்...

கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தை நக்சலைட்கள் பரபரபாக்கி வந்தனர். இப்போது டிசம்பர் 6 நெருங்கும் நிலையில்இஸ்லாமிய தீவிரவாதிகள் பிடிபட்டு கலவரமூட்டி வருகின்றனர்.

மும்பையில் குண்டு வெடித்தது:

டிசம்பர் 6ம் தேதியையொட்டி மும்பையில் நேற்றிரவு பஸ்சில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 2 பேர் பலியாகியுள்ளனர்.இதனால் அந்த நகரில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தில் அதைப் போல ஏதும் நடந்துவிடாமல் தடுக்க தீவிரபாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் பாதுகாப்பு:மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும், திருச்செந்தூர், பழனி ஆகிய இடங்களிலும் ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டுகண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X