For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெடிகுண்டு பயம்: ரயில்களில் பார்சல்கள் ஏற்றுவது நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தமிழக ரயில் நிலையங்களில் ரயில் மூலம் பார்சல்கள் அனுப்புவதுதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதால் மாநிலம் முழுவதும் கண்காணிப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், முக்கியத் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரயில்நிலையங்கள், தலைவர்களின் சிலைகள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் மூலம் பார்சல்கள்அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும்.

இதுதவிர திருச்சி தில்லை நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வீடுகளில் சோதனை நடந்துவருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள வீடுகளில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டுவருகிறது.

மல்லிப்பட்டனத்தில் கைதான 3 தீவிரவாதிகளிடமிருந்து 9 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள்கைப்பற்றப்பட்டது.

அந்த வெடிபொருள் துபாயிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து திருச்சிக்கு விமானம் முலம்வந்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் திருச்சியிலிருந்து கார் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டனத்திற்குகொண்டு செல்லப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் ரயில் பார்சல்களில் குண்டுகள் வைக்கப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளதால் திருச்சி உள்படதமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் சரக்குகள் கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

சரக்குகளை வாங்கவே ரயில்வே துறை மறுத்து வருகிறது. இதனால் ரயில்வே குடவுன்கள் காலியாகக் கிடக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளிலும் இதே போன்ற நடவடிக்கையில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சாலையில் குண்டு புரளி:

இதற்கிடையே சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக புரளிபரவியது. இதையடுத்து ரயில் பெட்டித் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், தொழிற்சாலைக்குள் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக கூறி விட்டு போனை வைத்து விட்டார். இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையின் வெடிகுண்டுநிபுணர் குழு விரைந்து வந்தது.

தொழிற்சாலை முழுவதிலும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால், குண்டு ஏதும் கிடைக்கவில்லை.

ரயில்வே தொழிற்சாலையில் குண்டு புரளி:

இதற்கிடையே சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக புரளி பரவியது.இதையடுத்து ரயில் பெட்டித் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், தொழிற்சாலைக்குள் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக கூறி விட்டு போனை வைத்து விட்டார். இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையின் வெடிகுண்டு நிபுணர் குழுவிரைந்து வந்தது.

தொழிற்சாலை முழுவதிலும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால், குண்டு ஏதும் கிடைக்கவில்லை.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X