• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஜராத் தேர்தல் அமைதியாக முடிந்தது: 63 சதவீத வாக்குப் பதிவு

By Staff
|

அகமதாபாத்:

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் குஜராத் சட்டசபைக்கான தேர்தல் இன்று மிகவும் அமைதியாக முடிந்தது. சுமார்63 சதவீத வாக்குகள் பதிவாகின.

கடந்த பிப்ரவரி மாதம் கோத்ராவில் 50க்கும் மேற்பட்ட ராம கர சேவகர்கள் ரயிலோடு கொளுத்தப்பட்டதைத்தொடர்ந்து குஜராத் முழுவதும் இனக் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு தீவிரம்:

இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்குப்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சுமார் ஒன்றரை லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மொத்தமுள்ள 25 மாவட்டங்களில், 22 மாவட்டங்களில் அமைந்துள்ள 14,707 வாக்குச் சாவடிகள் பதற்றம்நிறைந்தவையாகக் கருதப்பட்டு, அங்கு அளவுக்கு அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு:

இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் அமைதியாக வாக்குச் சாவடிகளுக்குச்சென்று வாக்களித்தனர்.

நகர்ப்புறங்களில் ஓரளவுக்கு மக்கள் வந்து ஓட்டுப் போட்டுக் கொண்டிருந்த போதிலும், கிராமப் புறங்களில்வாக்குப் பதிவு மந்தமாகவே இருந்ததாகத் தெரிகிறது.

இந்த ஆண்டு இனக் கலவரம் தோன்றிய கோத்ராவில் வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்புடன் நடந்தது.அதிகாலையிலேயே மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கொண்டிருந்தனர்.

தேர்தல் தொடங்கிய 2 மணி நேரத்திற்குள்ளாகவே சுமார் 25 சதவீத வாக்குகள் இங்கு பதிவாகியதைக் கண்டுதேர்தல் அதிகாரிகளே ஆச்சரியமடைந்தனர்.

பா.ஜ.க. ஆவலுடன் குறிவைத்துக் கொண்டிருந்த செளராஷ்டிரா பகுதிகளில் காலையிலிருந்து மாலை வரைவாக்குப் பதிவு மந்தமாகவே இருந்தது.

மோடி, அத்வானி வாக்குப் பதிவு:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அகமதாபாத் அருகே உள்ள சர்கேஜ் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்குச்சென்று தன்னுடை வாக்கைப் பதிவு செய்தார். அவர் மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

துணைப் பிரதமர் அத்வானியும் அகமதாபாத் நகரில் உள்ள ஷாப்பூர் தொகுதியில் ஓட்டு போட்டார்.

குஜராத் சட்டசபையில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன. சூரத் மேற்குத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சமீபத்தில்மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 181 தொகுதிகளில் சுமார் 32,000 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடந்தது.

மின் எந்திரம் கோளாறு:

சில சாவடிகளில் மின் வாக்குப் பதிவு எந்திரம் கோளாறு செய்ததால் அங்கெல்லாம் வாக்குப் பதிவு தற்காலிகமாகநிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் வேறு எந்திரங்கள் மூலம் மீண்டும் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

குஜராத் மக்கள் தற்போது தான் முதல் முறையாக மின் வாக்குப் பதிவு எந்திரத்தைப் பயன்படுத்தினர் என்பதுகுறிப்பிடத்தக்கது. சுமார் 1,000 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டியலில் இந்து பெயர்கள் "மிஸ்ஸிங்"?

இதற்கிடையே ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் விடுபட்டிருந்ததும் இன்று தெரிய வந்தது.

இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீண் தொகாடியாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ வேண்டுமென்றே இந்துக்களின் பெயர்களை நீக்கியுள்ளதாக தொகாடியாகுற்றம் சாட்டினார்.

பட்டியலில் பெயரில்லாததால் வாக்களிக்க முடியாமல் அவதிப்பட்ட அனைவரும் தேர்தல் கமிஷனுக்கு எதிராகநீண்ட நேரமாகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தஉத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, நெதர்லாந்து, இத்தாலி, ஸ்வீடன் போன்ற நாடுகளைச் சேர்ந்த 17பார்வையாளர்கள் குஜராத் தேர்தலைக் கண்காணித்தனர்.

15ம் தேதி வாக்கு எண்ணிக்கை:

இந்நிலையில் வரும் 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான முடிவைத்தெரிவித்திருப்பதால் முக்கியக் கட்சிகளான பா.ஜ.கவும் காங்கிரசும் மிகவும் குழம்பிப் போயுள்ளன.

எது எப்படி இருந்தாலும் வரும் 15ம் தேதி குஜராத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது தெரிந்து விடும்.

Sᶵz -70; Ea }vࠓ B

-->

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X