For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர்கள் தம்பிதுரை, தளவாய் சுந்தரம் திடீர் நீக்கம்: பின்னணி விவரங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தம்பிதுரையும், தளவாய் சுந்தரமும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தம்பிதுரையின் கல்லூரியில் நில உச்சவரம்பு சட்டம் மீறப்பட்டுள்ளது. ஆனால், பத்திரப் பதிவுத்துறையை தனது கையில் வைத்திருந்த தளவாய் சுந்தரம் இந்த நிலவிவகாரத்தில் தம்பிதுரைக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றதால் இருவருக்கும் ஆப்புவைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்த 19வது மாதத்தில் இந்த இருவரும் பதவி இழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 10முறை அமைச்சரவையில் ஜெயலலிதா மாற்றம் செய்துள்ளார். இதில் 23 பேர் பதவி இழந்துள்ளனர்.

கல்வி அமைச்சராக மிக அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தவர் தம்பிதுரை. அவருக்கு பெங்களூர் உள்பட பல இடங்களில்பொறியியல் கல்லூரிகளும் ஹோம் சயின்ஸ் கல்லூரிகளும் உள்ளன. கல்விதுறையை கவனிப்பதைவிட தனது கல்லூரிகளைகவனிப்பதில் தான் தம்பிதுரை அதிக கவனம் செலுத்தி வந்தார்.

அதே போல சமீபத்தில் நடந்த ஆசிரியர் போராட்டம் தம்பிதுரைக்கு பிளாக் மார்க்கை ஏற்படுத்தியது. ஆசிரியர்களை பணியவைக்க ஜெயலலிதா என்னென்னவோ செய்து பார்த்தும் பாச்சா பலிக்கவில்லை.

ஆசிரியர்கள் போராட்டத்தை நசுக்குவதில் தம்பிதுரை வெற்றி பெறாதததால் அவர் மீது ஜெயலலிதா கடுப்பில் இருந்து வந்தார்.

மனைவியின் பெயரில் கல்லூரி:

இந் நிலையில் தம்பித்துரையின் மனைவி பானுமதி, தர்மபுரி மாவட்டம் ஓசூரில் நடத்தி வரும் அதியமான் பொறியியல் கல்லூரிநில விவகாரம் வெடித்தது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுவாமிநிாதன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், வரம்புக்கு மீறி 216ஏக்கர் நிலம் இந்த கல்லூரிக்கு சொந்தமானதாக உள்ளது. இது அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்குப்புறம்பானது.

ஆனால் விதிமுறைகளுக்குப் புறம்பாக அதியமான் கல்லூரி 216 ஏக்கர் நிலத்துடன் உள்ளது. அதேசமயம், விதிமுறைகளைமீறியதாக 66 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது. எனவே அதியமான்கல்லூரியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதில் பத்திரப் பதிவுச் சட்டத்தின் 37 (பி) பிரிவு இதில் மீறப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அரசிடம்விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே டான்சி நிலத்தை வாங்கிவிட்டு முதல்வர் பதவி இப்பவோ அப்பவோ என தவித்து வரும் ஜெயலலிதா இதனால்கடுப்படைந்தார்.

இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரனிடம் விளக்கம் கேட்டார் ஜெயலலிதா. அப்போதுதமிழக அரசின் நில சீர்திருத்தச் சட்டத்தை மீறி அதியமான் கல்லூரி அதிக அளவில் நிலங்களை தன் வசம் வைத்துக் கொள்ளஅனுமதி வழங்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த அனுமதியை பத்திரப் பதிவுத்துறையை தன் வசம் வைத்திருக்கும் வருவாய்த்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தான் தந்தார்என்பதும் தெரிய வந்தது. வழக்கு உறுதியாக இருப்பதாகவும் என்.ஆர். சந்திரன் எடுத்துக் கூறினார். அரசு நிலத்தை தம்பிதுரைக்குவருவாய்த்துறை அமைச்சரான தளவாய் சுந்தரம் தாரை வார்த்து இருப்பது உண்மை தான் என்று தெரியவந்தது.

இதையடுத்து நேற்றிரவு தம்பிதுரையையும் தளவாய் சுந்தரத்தையும் போயஸ் கார்டனுக்கு அழைத்தார் ஜெயலலிதா.இருவரிடமும் விளக்கம் கேட்ட ஜெயலலிதா கடும் கோபத்துடன் எழுந்து சென்றார். அப்போதே இருவருக்கும் பதவிபோகப்போவது தெரிந்துவிட்டது. இதையடுத்து இருவரும் முகம் வெளிரிப் போய் அங்கிருந்து வெளியேறினர்.

அடுத்த அரை மணி நேரத்தில் கவர்னர் மாளிகைக்கு இந்த இருவரின் பதவியையும் பறிக்கும் கடிதமும் சிபாரிசும் சென்றது.அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரின் பதவியும் காலியானது.

தளவாய்:

தளவாய் சுந்தரம் ஆரம்பத்தில் இருந்தே மிக செல்வாக்கோடு தான் இருந்து வந்தார். முதலில் இவருக்கு பொதுப்பணித்துறைதரப்பட்டது. அதில், டெண்டர்களில் புகுந்து விளையாடினார். ஆனால், போயஸ் தோட்டத்துக்கு உரிய கப்பம் கட்டியதால்அவரது அதிகாரம் வேகமாக வளர்ந்தது.

ஆனால், பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் இருந்து இறங்கியபோது அவருக்கு முக்கிய பதவியைத் தருவதற்காக தளவாய்சுந்தரத்திடம் இருந்த பொதுப் பணித்துறையைப் பறித்தார் ஜெயலலிதா.

ஆனாலும் தளவாய்க்கு இன்னொரு முக்கிய துறையான வருவாய்த்துறை தரப்பட்டது. இருந்தாலும் கட்சியினரை தளவாய்கண்டுகொள்வதில்லை, அரசு உதவிகள் பெற உதவுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதனால் அவர் மீது அதிமுகவினர்தொடர்ந்து ஜெயலலிதாவிடம் புகார்களைக் குவித்து வந்தனர்.

இந் நிலையில் பத்திரப் பதிவுத் துறையை தன் வசம் வைத்திருந்த தளவாய் அதைத் தவறாகப் பயன்படுத்தி தம்பிதுரையின்கல்லூரிக்கும் மேலும் சில வேண்டிய கல்லூரிகளுக்கும் நிலம் ஒதுக்கி மாட்டிக் கொண்டதால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கலாமுடன் மேடை ஏறுவது தவிர்ப்பு:

இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் துவங்குகின்றன. இதனை ஜனாதிபதி அப்துல் கலாம்துவக்கி வைக்கிறார். இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் என்ற முறையில் கல்வியமைச்சர் தம்பிதுரை தான்மேடையில் அமர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், நில மோசடி விவகாரத்தால் நீதிமன்றத்திடம் இருந்து கல்வி அமைச்சருக்கு நோட்டீஸ் வந்துள்ள நிலையில் அவரைஜனாதிபதியுடன் மேடை ஏற விட வேண்டாம் என்ற நோக்கத்தில் தான் நேற்று இரவே பதவி தூக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செம்மலையிடம் கல்வித்துறை:

தம்பிதுரையிடம் இருந்த கல்வி, தொழில் நுட்பக்கல்வி, தமிழ் வளர்ச்சித்துறை, விளையாட்டு, இளைஞர் நலம், அகதிகள்பராமரிப்பு ஆகிய பொறுப்புக்கள் நலத்துறை அமைச்சர் செம்மலையிடம் தரப்பட்டுள்ளன.

செம்மலை சில மாதங்களுக்கு முன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்றார். ஆனால், சமீபகாலமாக அரசு மருத்துவமனைகளில் நடந்து வரும் குளறுபடிகள் மர்மச் சாவுகள், டாக்டர்கள் போராட்டத்தால் செம்மலையின்தலை உருளலாம் என்று தான் பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால், அவருக்கு கூடுதல் பொறுப்புக்கள் தந்து எல்லோரையும் குழப்பியுள்ளார் ஜெயலலிதா.

மீண்டும் பன்னீர் வசம் வருவாய்த்துறை:

சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. சசிகலா சொன்னார் என்றுமுதல்வரிடம் கூட ஆலோசிக்காமல் சில டெண்டர் வேலைகளை சசி குடும்பத்துக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கியதால் அவர்மீது ஜெயலலிதா கடுப்பில் இருந்தது உண்மை.

கூப்பிட்டும் கண்டித்து அனுப்பினார். இதனால் பன்னீர் மட்டம் தட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரிடம்தளவாய் சுந்தரத்திடம் இருந்த வருவாய்த்துறை, பாஸ்போர்ட் ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் யாரும் எதிர்பார்க்காததை செய்வது தான் என் ஸ்டைல் என்பதை ஜெயலலிதா மீண்டும் நிரூபித்துள்ளார்.

தளவாய்க்கு வாய் ஜாஸ்தி:

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த தளவாய் சுந்தரம் ஜெயலலிதா வழக்குகளுக்காக நீதிமன்றத்துக்குவரும்போதெல்லாம் கூட வந்து அம்மா ஆதரவு கோஷம் போடுவார். இந்த ஜால்ராவுக்காகவே அவரை திடீரென ராஜ்யசபாஎம்.பியாக்கினார் ஜெயலலிதா.

பின்னர் அமைச்சராகவும் ஆகி முக்கிய பொறுப்புகள் வகித்தார். அதிமுகவில் தளவாய்க்கு ஏற்பட்டுள்ள முதல் சறுக்கல் இது என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி. தன்னை நாடி வரும் அதிமுகவினரையே கூட மதிக்காமல் தான்பேசி வந்தார். இதனால் தளவாய்க்கு செக் வைக்க சமயம் பார்த்து வந்தார் ஜெயலலிதா.

இப்போது நில ஒதுக்கீடு, கோர்ட் என்று விவகாரம் பெரிதாகிவிட்டதால் அவர் விரட்டி விடப்பட்டுள்ளார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X