For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இசை விழாவில் ராகத்துடன் கவிதை பாடி கலாம் அசத்தல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் நடந்த இசை விழா ஒன்றில் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தன்னுடைய கவிதையைராகத்துடன் பாடி பார்வையாளர்களின் பலத்த "அப்ளாஸ்"களைப் பெற்றார்.

இரண்டு நாள் பயணமாகச் சென்னை வந்துள்ள டாக்டர் கலாம், தமிழிசைச் சங்கத்தின் 60வது ஆண்டு விழாவைத்தொடங்கி வைத்தார்.

தான் எழுதிய ஒரு கவிதையைத் தன் நண்பரான செல்லமூர்த்தி பாடுவார் என்று தன்னுடைய உரையின்போதுடாக்டர் கலாம் அறிவித்தார். ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

நவ நாகரீக வாழ்க்கையில் இசைக்கு இடம் கொடுக்க நமக்கு நேரம் இல்லாமல் போய் விட்டது. உலகத்தவரின்பார்வையில் இந்தியாவுக்கு மதிப்புமிக்க இடம் கிடைத்துள்ளதற்கு கர்நாடக இசையும் ஒரு காரணம் என்பதை நாம்மறந்து விடக் கூடாது.

இசைக் கலைஞர்கள் இசையோடு தேசப் பற்று மிக்க பாடல்களையும் பாட வேண்டும். சுதந்திரப் போராட்டகாலத்தில் மகாகவி பாரதியார் பாடிய பாடல்கள் தேசப்பற்றை ஊட்டுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. அந்தசமயங்களில் விடுதலை, விடுதலை, விடுதலை என்ற பாடல் ஒலிக்காத வாய்களே கிடையாதாம்.

எனது பெற்றோர் குரானைப் படிக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனான எனக்கு இசையில்ஆர்வம் பிறந்தது. குரான் படிப்பதோடு, கர்நாடக இசையும், தமிழ் இசையும் சேர்ந்து எனக்குள் இசை ஆர்வத்தைப்பெரிதாக்கி விட்டுவிட்டன.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து திருவையாறு சென்று தியாகராஜஆராதனை விழாவில் கலந்து கொண்டோம். அது எனக்குள் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்குபாலமுரளி கிருஷ்ணா பாடிய "எந்தரோ மாகானுபாவலு..." என்ற பாடல் என்னை உருக்கி விட்டது.

இசையை பள்ளிப் பாடங்களில் ஒரு அங்கமாக சேர்க்க வேண்டும். இசையில்லாத வாழ்க்கை கசப்பானது. இசையைசிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கற்பித்தால் இறையுணர்வும்,தேப்பற்று உணர்வும் அவர்களுக்குதூண்டப்படும் என்றார் டாக்டர் கலாம்.

இதுவரை ஜனாதிபதியின் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அசரும் வகையில்,தான் எழுதிய பாட்டை நண்பர் செல்லமூர்த்தி பாடுவார் என்றும் டாக்டர் கலாம் அறிவித்தார்.

ஆனால் ஆச்சரியத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்களுக்கு மேலும் ஆச்சரியம் ஏற்படுத்தும் விதத்தில்ஜனாதிபதியையும் அழைத்து தன்னுடன் பாடுமாறு கேட்டுக் கொண்டார் செல்லமூர்த்தி.

இதையடுத்து டாக்டர் கலாமும், செல்லமூர்த்தியும் இணைந்து "இளைஞர்களின் எழுச்சி கீதம்" என்ற தலைப்பிலானகவிதையை ராகத்துடன் பாடினர்.

"வளமான நாடாக்குவோம், இள உள்ளங்கள் பொறி ஏற்றியே" என்று தொடங்கும் கவிதையை ராகத்துடன்ஜனாதிபதி பாடியதைக் கேட்டதும், பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி, கைதட்டி பாராட்டினர்.

அதன் பின்னர் அந்தக் கவிதையைக் காம்போதி ராகத்தில் டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் தனக்கே உரியபாணியில் பாடினார்.

தன்னுடைய கவிதைக்குப் பாடல் வடிவம் கொடுக்கப்பட்டதைக் கேட்டு டாக்டர் கலாம் கேட்டு கைதட்டிசீர்காழிக்குப் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு "இசைப் பேரறிஞர்" என்ற பட்டத்தை டாக்டர் கலாம் வழங்கினார்.

"2020ல் வளர்ச்சி பெற்ற இந்தியா":

இதற்கிடையே இன்று காலை மீண்டும் அண்ணா பல்கலைக்கழகம் சென்ற டாக்டர் கலாம் அங்கு ஆயிரக்கணக்கானமாணவர்களுடன் உரையாடினார்.

எந்த மாநிலத்திற்கு, எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் மாணவர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள டாக்டர்கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டமாணவ-மாணவிகளைச் சந்தித்தார். அவர்களுடன் அவர் பேசுகையில்,

இந்தியா பலம் பொருந்திய நாடாக மாறினால்தான் உலக நாடுகள் நமக்கு மதிப்பு கொடுக்கும். அடுத்த 20ஆண்டுகளில் இந்த மதிப்பை நம் இந்தியா நிச்சயம் பெறும்.

பக்கத்து நாடான பாகிஸ்தான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதால்தான் நாமும் அதைத் தயாரித்து வைத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புக்காகத்தான் நாம் அணு ஆயுதத்தை வைத்திருக்கிறோமே தவிர, எந்தக் காரணத்தைக் கொண்டும் அதைமுதலில் பயன்படத்த மாட்டோம்.

இந்தியாவின் ஏழ்மையை அகற்ற வேண்டுமானால் அது உங்கள் கைகளில்தான் உள்ளது. எப்போதும் கனவுகாணுங்கள். கனவை நனவாக்கி செயல்படுத்துங்கள். அப்போதுதான் இந்தியா முழு வளர்ச்சியடைந்த நாடாகும்.

வரும் 2020ம் ஆண்டில் நாம் அனைவரும் முழு வளர்ச்சி பெற்ற இந்தியாவில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.

எப்போதுமே உயர்வாகவே சிந்தியுங்கள். அந்தப் பாதையிலேயே நடை போடுங்கள். பெருங்கடலைப் பாருங்கள்,அதில் தோன்றும் சிறிய சிறிய அலைகளை மட்டும் பார்க்காதீர்கள் என்றார் டாக்டர் கலாம்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X