For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் அடுத்த சூப்பர் கம்யூட்டர் பரம்-பத்மா

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

இந்தியா உருவாக்கி வரும் பரம்-பத்மா சூப்பர் கம்யூட்டர் அடுத்த மாதம் தயாராகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹை பவர் கம்ப்யூட்டிங் ஆசியா 2002 என்ற மாநாடு பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை செயலாளர் ராஜீவ் ரத்ன ஷா நிருபர்களிடம் பேசுகையில்,

மத்திய அரசின் சென்டர் பார் அட்வான்ஸ் கம்யூட்டிங் (CDAC) இந்த கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது. TeraflopPARAM-Padma supercomputer என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிவேக கம்யூட்டரின் விலை 5 மில்லியன் அமெரிக்கடாலர்களாக இருக்கும். இது இப்போது சர்வதேச சந்தையில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டரை விட பாதி விலையே ஆகும்.

சிடாக் முன்பு உருவாக்கிய பரம் ரகத்தைச் சேர்ந்த 52 கம்யூட்டர்கள் இப்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் 42கம்ப்யூட்டர்கள் இந்தியாவிலும் 4 கம்யூட்டர்கள் ரஷ்யாவிலும், தலா ஒரு கம்ப்யூட்டர்கள் கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகியநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்போதைய பரம்-பத்மா சூப்பர் கம்யூட்டர்களை வாங்க ரஷ்யா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த கம்ப்யூட்டர் 16டெராபிளாப் திறன் கொண்டது.

2002-2007ம் ஆண்டுகளில் சூப்பர் கம்ப்யூட்டர் ஆராய்ச்சிகளுக்காக மத்திய அரசு ரூ. 130 கோடியை ஒதுக்கியுள்ளது.

Nano technology எனப்படும் நுண் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு இனி அதிக முக்கியத்துவம் தரப்படும். இதற்காக ஒருமையமும் அதன் கிளை மையங்களும் நாடு முழுவதும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் Nano electronics, Nano computing, Nano informatics மற்றும் Nano electro mechanicalsystems தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கும் என்றார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X