சென்னை டெலிபோன் எண்கள்: இன்று நள்ளிரவு முதல் "2" சேர்க்க வேண்டும்
சென்னை:
சென்னை நகரில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் இன்று நள்ளிரவு முதல் 8 இலக்கஎண்களாக மாறுகின்றன. தற்போதுள்ள எண்களுக்கு முன் 2 என்ற எண்ணை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றுபி.எஸ்.என்.எல். கூறியுள்ளது.
இந்தியாவில் தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது தனியார்களும்தொலைபேசி சேவையில் நுழைந்துள்ளனர்.
இதையடுத்து எளிதில் அடையாளம் காண்பதற்கு வசதியாகவும், தொழில்நுட்ப வசதிக்காகவும் ஒவ்வொருநிறுவனத்துக்கும் தனிப்பட்ட எண்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பி.எஸ்.என்.எல். நிறுவன தொலைபேசி எண்களுக்கு முன் 2 என்ற எண் சேர்க்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை 5 இலக்கமாக இருந்த எண்கள் 6 இலக்கமாகவும், 6 இலக்க எண்கள் 7இலக்க எண்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
அனைத்து ஊர்களிலும் இந்த மாற்றம் முடிந்து விட்டது. தற்போது சென்னை நகரில் உள்ள தொலைபேசி எண்கள்மாற்றப்படவுள்ளன. சனிக்கிழமை நள்ளிரவு முதல் அனைத்து எண்களும் 8 இலக்க எண்களாக மாற்றப்பட்டு விடும்.
சென்னை நகரில் உள்ள 10.6 லட்சம் தொலைபேசி எண்களுக்கு முன்பும் 2 என்ற எண்ணைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். மற்ற தொழில்நுட்ப வசதிகள் அப்படியே தொடரும் என்று பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.
அதுபோல டாடா, டச்டெல் போன்ற தனியார் தொலைபேசி எண்களுக்கு வேறு தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
-->


