For Daily Alerts
மாட்டுவண்டி மீது லாரி மோதல்: புது மண பெண் விபத்தில் சாவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் புதுப் பெண் உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காந்திகிராமம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் 2 மாட்டு வண்டிகளில் அருகில் உள்ளகோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தோமையர்புரம் என்ற இடத்தில் மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தபோது, ராஜபாளையத்திலிருந்துஈரோட்டிற்கு சென்று கொண்டிருந்த லாரி அவற்றின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் செல்வி என்ற பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். செல்விக்கு கல்யாணமாகி 40 நாட்கள்தான் ஆகிறது.அதற்குள் அவரது வாழ்க்கை முடிந்து விட்டது.
மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-->


