தீவிரவாதம் வளர ஜெயலலிதா தான் காரணம்: இளங்கோவன்
சென்னை:
தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்கி இருப்பதற்கு ஜெயலலிதா அரசின் போக்கு தான் காரணம் என காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் கட்டடத் தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய அவர்,
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் உண்ணாவிரதம் நடக்காத நாளே இல்லை. இந்த அம்மையாரின் ஆட்சிக்குஎதிராக இது போன்ற உண்ணாவிரதங்கள் எல்லாம் இனிமேல் பயன்படாது. காந்திய வழியில் நடத்தப்படும் அமைதியான,சாத்வீகமான போராட்டங்களை உணரும் அருகதையோ அக்கறையோ ஜெயலலிதாவுக்குக் கிடையாது.
இந்த அம்மையாருக்கு எதிராக மக்கள் இனி சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கிப் போராடினால்தான் விடிவு கிடைக்கும்.
பா.ஜ.கவின் தீவிர இந்துத்துவா கொள்கைளை தமிழகத்தில் அமலாக்கும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். இதனால்இந்துத்துவா தீவிரவாதிகளும் அவர்களுக்கு எதிரான தீவிரவாதிகளும் உருவாகத் தான் செய்வார்கள்.
குஜராத் மாநில முதல்வராக மோடி பதவியேற்பில் ஜெயலலிதா பங்கேற்கிறார். மக்களின் உயிரைக் குடித்து அதில் ஓட்டு வாங்கிஆட்சிக்கு வந்த அந்த மனிதருடன் போய் ஒட்டுகிறார் ஜெயலலிதா. இதன் மூலம் நானும் ஒரு இந்துத்துவா வெறியர் தான் என்றுஜெயலலிதா அடையாளம் காட்டிக் கொண்டுள்ளார்.
அவர் பதவியில் இருக்கும் வரை தமிழகத்திலும் இந்துத்துவா தீவிரவாதமும் போட்டிக்கு வேறு தீவிரவாதமும் வளரத் தான்செய்யும். பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் செழித்து வளரத்தான் செய்யும்.
தமிழகத்தில் மதவாதத்தைத் தூண்டிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கம் காரணமாகத் தான் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில்ஜெயலலிதா கலந்து கொண்டுள்ளார்.
தீவிரவாதம் வளர இன்னொரு காரணம் ஜெயலலிதா அரசின் நிர்வாக சீர்கேடுகள். தினசரி ஒரு தீவிரவாதி கைதுசெய்யப்படுவதைப் பார்க்கும்போது தமிழகத்தில் தீவிரவாதிகள் படையெடுப்பு நடக்கிறதோ என்ற சந்தேகம்தான் வருகிறதுஎன்றார் இளங்கோவன்.
-->


