நாகப்பா சாவு: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மர்மமான முறையில் இறந்ததுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வீரப்பன் காட்டில் குண்டுக் காயத்துடன் கடந்த 8ம் தேதி பிணமாக மீட்கப்பட்டார் நாகப்பா. அவரைக் கொன்றதுயார் என்ற மர்ம முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படாமலே உள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் எஸ்.டி. ராஜதேவன் என்பவர் இம்மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில்,
தமிழக அதிரடிப்படையினர் வீரப்பனுடன் நடத்திய துப்பாக்கிச் சண்டையின்போதுதான் நாகப்பா குண்டடி பட்டுஉயிரிழந்தார் என்று வீரப்பன் கூறியுள்ளான். ஆனால் இதை தமிழக அரசு மறுத்துள்ளது.
நாகப்பாவின் உடல் கிடந்த இடத்தின் அருகே அவருடைய டைரி கண்டெடுக்கப்பட்டது. அதில் பல்வேறுதகவல்கள் உள்ளன.
அவருடைய உடலை காட்டு விலங்குகள் கடித்துக் காயப்படுத்தியதற்கான அடையாளங்கள் இருப்பதாகக்கூறப்படுகிறது.
ஆனாலும் பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னரும் கூட இன்னும் நாகப்பாவின் மரணம் குறித்த உண்மைஇன்னும் வெளியாகவில்லை.
எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டு, ஒரு மாதத்திற்குள் அது அறிக்கை ஒன்றையும் தாக்கல்செய்ய உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தார் ராஜதேவன்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் கூறுகையில்,
அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட முடியும்.
அதாவது, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அரசு தவறிவிட்டது என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல்நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை அதுபோன்ற அசாதாரண சூழ்நிலை எதுவும் நடக்காததால் இவ்விஷயத்தில்நீதிமன்றம் தலையிடுவதற்கான அவசியமே ஏற்படவில்லை.
எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.
-->


