""தவம் செய்து மேட்டூர் அணையை நீரால் நிரப்புவேன்"": சென்னை சாமியார் "சபதம்"!

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

"என்னுடைய தவ வலிமையால் ஜனவரி 23ம் தேதிக்குள் மேட்டூர் அணையை நீரால் நிரம்பி வழியச் செய்வேன்"என்று கூறி சென்னையைச் சேர்ந்த ஒரு சாமியார் அணைப் பகுதியில் முகாமிட்டுள்ளார்.

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இந்த சாமியார். இவரது பெயர் ரத்தினசபாபதி. இவருக்கு 70வயதாகிறது.

இதற்கு முன்பு பல இடங்களில் தனது தவ வலிமையால் மழையை வரவழைத்துள்ளதாக கூறிக் கொள்ளும்ரத்தினசபாபதி சாமியார், தண்ணீரின்றி வாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக மேட்டூர்அணையை நிரப்ப முன் வந்துள்ளதாக கூறுகிறார்.

தன் மனைவியுடன் மேட்டூருக்கு வந்த அவர் அங்கு ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து தங்கியுள்ளார்.

மேலும் அங்கு புலித்தோலுடன் அமர்ந்து கடும் தவத்திலும் ஈடுபட்டுள்ளார். யாகமும் வளர்க்கிறார். அந்தச்சாமியார் கூறுகையில்,

தமிழர்கள் தண்ணீருக்காக யாரிடமும் பிச்சை கேட்கக் கூடாது. என்னுடைய தவம் மற்றும் யாகத்தால் தண்ணீர்அணுக்களை உருவாக்கி அதன் மூலம் என்னால் மழையை உருவாக்க முடியும். இந்த யாகத்தை நான் முன்பேசெய்திருக்க முடியும்.

ஆனால் இயற்கையாக மழை வந்து விட்டால், எனது தவத்தின் நேர்மை கேள்விக்குறியதாகி விடும். எனவேதான்மழை வர சாத்தியமே இல்லாத இந்த ஜனவரி மாதத்தை தேர்ந்தெடுத்தேன் என்றார் சாமியார்.

சாமியாரின் வார்த்தை பலித்து மேட்டூர் அணை நீரால் நிரம்பப் போகிறதோ இல்லையோ, அவர் பேசுவதைவேடிக்கை பார்க்க பெரும் கூட்டம் கூடி வருகிறது மேட்டூரில்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+