• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகைக் கடை அதிபரிடம் கொள்ளை: ரெளடியின் மகளுடன் கேரளாவில் பிடிபட்ட கொள்ளையன்

By Staff
|

சென்னை:

திருச்சி நகைக் கடை அதிபரிடம் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்தசூர்யாவை கேரளத்தில் வைத்து போலீசார் மடக்கினர். அவனுடன் இருந்த பிரபல ரெளடி வெல்டிங்குமாரின் மகளும் பிடிபட்டார்.

திருச்சி தில்லை நகரில் நகைக்கடை வைத்திருப்பவர் சுபாஷ் சந்த் ஜெயின் (வயது 41). இவர் கடந்தஏப்ரல் மாதம் நகைகள் வாங்க சென்னை வந்தார்.

ரூ.1.25 கோடிக்கு தங்க, வைர நகைகளை வாங்கிக் கொண்டு திருச்சிக்கு ரயில் ஏற தனது நண்பரின்காரில் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது காரை ஓட்டிய டிரைவர் சீதாராமன்,அவனது நண்பன் சூரியா என்ற ஜெயசூரியா இருவரும் , சுபாஷ்சந்த் ஜெயினை கடத்தி சென்றனர்.

அவரைத் தாக்கி காரில் இருந்து தள்ளிவிட்டுவிட்டு நகைகளைக் கொள்ளை அடித்துக் கொண்டுதப்பினர்.

இதில் சீதாராமன் சென்ற மாதம் மும்பையில் வைத்து தனிப்படை போலீசாரால் கைதுசெய்யப்பட்டான். சீதாராமன் திருப்பூரில் உள்ள தனது சகோதரிகள் பானுமதி, மீனாள்ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்த ரூ. 95 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் போலீசார்மீட்டனர். சகோதரிகளும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், சூரியா மட்டும் பிடிபடாமல் இருந்தான். கொள்ளையடித்த நகைகளில் ஒரு பகுதியை தனதுதந்தை வேலுமணி, தாயார் ராணி ஆகியோரிடம் கொடுத்துவிட்டு அவன் தப்பினான். இதையடுத்துவேலுமணி, ராணி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த தங்க, வைரநகைகளை மீட்டனர்.

இதற்கிடையே சூர்யா கேரளாவில் கண்ணனூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவனதுசெல்போன் உரையாடல்களை வைத்து அவன் இருக்குமிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீஸ் படை கண்ணனூர்விரைந்து.

கண்ணனூரில் பீட்டர் என்ற பெயரில் சூர்யா வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தான். ஒருஹோட்டலில் வேலை பார்த்து வந்தான். தலையை மொட்டை போட்டு, கண்ணாடி அணிந்து சூரியாதனது தாாேற்றத்தையே மாற்றி இருந்தான். ஆனாலும் அவனை அடையாளம் பார்த்துக் கொண்டபோலீசார் அவனை வீட்டுக்குள் வைத்துப் பிடித்தனர்.

அப்போது அவனுடன் நித்யா என்ற பெண் இருந்தாள். அவள் தனது காதலி என்றும் அவளைதிருமணமும் செய்து கொண்டுவிட்டதாகவும் சூர்யா கூறினான். இதையடுத்து நித்யாவும் கைதுசெய்யப்பட்டார்.

கொள்ளை அடித்த நகைகளில் 1.5 கிலோ எடையுள்ள தங்க , வைர நகைகளை சூர்யா வீட்டில்வைத்திருந்தான். அதையும் போலீசார் கைப்பற்றினர்.

இந்த நித்யா குறித்து விசாரணை நடத்தியபோது அவர் சென்னையின் பிரபலமான ரெளடி வெல்டிங்குமாரின் மகள் என்பதும் தெரியவந்தது. இதனால் அவனும் இந்த வழக்கில் பிடிபடலாம் என்றுதெரிகிறது.

சூரியாவையும் நித்யாவையும் நேற்று போலீசார் சென்னை கொண்டு வந்தனர்.

கொள்ளை நடந்த ஒன்றரை மாதத்துக்குள் கொள்ளையர்களையும் கைது செய்து, கிட்டத்தட்ட 500கிராம் நகை தவிர அனைத்து நகைகளையும் மீட்டுள்ளனர் போலீசார்.

இணை கமிஷனர் எம்.கே.ராஜா, துணை கமிஷனர் கிறிஸ்டோபர் நெல்சன், உதவி கமிஷனர்கள்பாலசுப்பிரமணியம், ஆறுமுக சாமி ஆகியோர் தலையிைல் இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜன்,வெங்கட்ராமன், அசோக்குமார், மணி மற்றும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸார் அடங்கியதனிப்படை இந்தச் சாதனையைப் புரிந்துள்ளது.

நிருபர்களிடம் பேசிய துணை கமிஷினர் கிருஸ்டோபர் நெல்சன், ரூ 1.25 கோடிமதிப்புள்ள நகைகள் ஒரே நேரத்தில் கொள்ளை போனது தென் இந்தியாவிலேயே மிகப் பெரியசம்பவமாகும்.

சம்பவம் நடந்து 45 நாட்களில் இதில் தொடர்புடைய 6 குற்றவாளிகளையும் பிடித்துள்ளோம்.கொள்ளை போன நகைகளில் 98 சதவீதத்தையும் மீட்டுவிட்டோம். 2 சதவீத நகைகளை இந்தத்திருடர்களிடமிருந்து அவர்களது உறவினர்களே திருடிவிட்டதாதத் தெரிகிறது, அவற்றை மீட்போம்என்றார்.

இப்போது பிடிபட்டுள்ள கொள்ளையன் சூரியா கரன்பாண்டஸ் கோர்சில் பி.ஏ.படித்தவன்.கராத்தேயில் மஞ்சல் பெல்ட் வாங்கியவன். சென்னையில் சங்கிலி பறிப்பு வழக்குகளும் இவன் மீதுஉள்ளன. இதற்காக பலமுறை சிறைக்குச் சென்றவன்.

அதே போல சீதாராமனும் சிறிய குற்றங்களுக்கு உள்ளே போனவன். சிறையில் தான் இருவரும்நண்பர்களாகியுள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X