For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலினுக்கு 2 பதவி: டி.ராஜேந்தர் பதவி பறிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும், இளைஞர் அணிச்செயலாளராகவும் ஸ்டாலினே தொடர்ந்து பதவி வகிப்பார் என அக் கட்சித் தலைமைஅறிவித்துள்ளது.

இதுவரை திமுக கொள்ளை பரப்புச் செயலாளராக இருந்து வந்த டி.ராஜேந்தர் அந்தப் பதவியில்இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விடுதலை விரும்பி எம்.பியும் கம்பம்செல்வேந்திரனும் கொ.ப.செவாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து இளைஞர் அணிச்செயலாளர் பொறுப்பையும் ஸ்டாலினே கவனித்து வருவார்.

பி.டி.ஆருக்குப் பதவி:

கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழு தலைவராக முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்செயல்படுவார். கட்சியின் செய்தித் தொடர்பாளராக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இருப்பார்.

வழக்கறிஞர் பிரிவு தலைவராக ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி (முதல்வர் ஜெயலலிதா மீது டான்சிவழக்கு போட்டவர்) இருப்பார். அமைப்புச் செயலாளர் இளங்கோவன், கொள்கை பரப்புச்செயலாளர்களாக விடுதலை விரும்பி, செல்வேந்திரன்,

தீர்மானக் குழுத் தலைவராக பொன் முத்துராமலிங்கம், செயலாளராக வெற்றிகொண்டான், விவசாயஅணி தலைவராக போடி முத்து மனோகரன், மாணவர் அணி தலைவராக திருச்சி சிவா ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் அணி:

புதிய மகளிர் அணி நிர்வாகிகளாக வண்ணை தேவகி, நூர்ஜஹான் பேகம், டாக்டர் காஞ்சனாகமலநாதன், காரல் மார்க்ஸ், சங்கரி நாராயணன், திருப்பூர் சுலோக்சனா ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.

விதி என்ன ஆச்சு?

திமுகவின் விதிப்படி ஒருவர் ஒரு பதவியில்தான் இருக்க முடியும். இதன் அடிப்படையில் முன்புதா.கிருட்டிணன் அமைச்சரானபோது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல பிற திமுகஅமைச்சர்களும் கட்சிப் பதவிகளை விட்டு விலகினர்.

இந் நிலையில், ஸ்டாலினுக்கு இரண்டு பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது திமுகவினருக்குள்ளேயேபல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கட்சியின் இரு முக்கியப் பொறுப்புகளை தக்க வைத்துக் கொண்டிருப்பதன் மூலம், ஸ்டாலின் தனதுசெல்வாக்கை கட்சியில் மேலும் வலுவூன்றிக் கொள்வார் என்று தெரிகிறது.

கருணாநிதிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்:

இதற்கிடையே, ராமநாதபுரம் நகர திமுக செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தலை எதிர்த்து திமுக பிரமுகர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் விளக்கம் கேட்டு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட 4 பேருக்கு நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல கலாட்டாக்கள், அடிதடி, கடத்தல், ஆள் பலம், பண பலம், ஒரு கொலையுடன் திமுக உட்கடசித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இதில், ராமநாதபுரம் நகர திமுக செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடந்தது. ஏற்கனவே செயலாளராக இருந்த ரத்தினம் என்பவரேமீண்டும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக கட்சி மேலிடம் அறிவித்தது.

ஆனால், இதை எதிர்த்து மான்கொம்பு நாகராஜன் என்பவர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

முறையாக தேர்தலே நடத்தாமல் ரத்தினத்தை திமுக தலைவர் செயலாளராக கட்தித் தலைமை அறிவித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிட நான் ரூ. 200 செலுத்தி விண்ணப்பித்திருந்தன்.

ஆனால், தேதி ஏதும் குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக கட்சி மேலிடம் திடீரென அறிவித்தது.

இதையடுத்து நான் ஊருக்குச் சென்றுவிட்டேன். ஆனால், திடீரென முரசொலி பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்தது. அதில், ராமநாதபுரம்நகரச் செயலளராக ரத்தினம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

இது முறைகேடானது. தேர்தலையே நடத்தாமல் அவரைத் தேர்வு செய்து தொண்டர்களை திமுக தலைமை ஏமாற்றிவிட்டது. இதனால்அவர் தேர்வு பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு முடியும் வரை செயலாளராக ரத்தினம்செயல்படுவதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

எந்தப் பதவிக்கும் அவர் போட்டியிடக் கூடாது, கட்சி தேர்தல்களில் வாக்களிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்றுமான்கொம்பு நாகராஜன் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த விடுமுறை கால நீதிபதி ராஜா சொக்கலிங்கம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கருணாநிதி,அன்பழகன், 2 தேர்தல் ஆணையர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதேசமயம், ரத்தினத்தின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X