For Daily Alerts
வேலூர் பல்கலைக்கழக தரத்தை உயர்த்த சென்னை ஐஐடி உதவி
சென்னை:
பாடத் திட்டங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டியும் வேலூர் தொழில்நுட்பக் கல்வி மையமும்(Vellore Institute of Technology) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
வேலூர் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கவும் ஐ.ஐ.டி. முன் வந்துள்ளது.வேலூர் தொழில்நுட்பக் கல்வி மாணவர்களின் பிஎச்.டி ஆராய்ச்சிகளுக்கும் ஐ.ஐ.டி. உதவும்.
இது தவிர இரு கல்வி நிலையங்களுக்கும் இணைந்து புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளன.
இரு தினங்களுக்கு முன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் செனனை ஐஐடி இயக்குனர் ஆனந்த்மற்றும் வேலூர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் விஸ்வநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
3 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இது பின்னர் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.


