For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசின் வேலைவாய்ப்பு இணைய தளம் துவக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசுத்துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள் குறித்த இணையதளத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்துள்ளார்.

Jayalalithaa launched TN govt. website for Employment
அரசுத் துறைகள் அனைத்தையும் இணையத் தளங்களைத் தொடங்குமாறு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும்மாவட்டக் கலெக்டர்களுக்கும் லேப்-டாப் கம்ப்யூட்டர்களையும் வழங்கி வருகிறார்.

தமிழக அரசுத் துறைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந் நிலையில் தமிழக வேலை வாய்ப்புத்துறைக்கான இணைய தளத்தை(www.employment.tn.gov.in) முதல்வர்தொடங்கி வைத்தார். அரசுத் துறையில் வேக்ைகு ஆள் எடுப்பது அறவே நிறுத்தப்பட்டுவிட்டதால் வேலைவாய்ப்புத்துறை அலுவலகங்களையே மூடிவிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த அலுவலகங்களை மூடிவிட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை நெட் மூலம் வெளியிடவும், புதிதாகவேலை கேட்டு பதிவு செய்பவர்களையும் ஆன்-லைன் மூலமே பதிவு செய்ய வைக்கவும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X