For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு: ஜெ. 11ம் தேதி டெல்லி பயணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்திற்கு இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து திட்டக் குழுவுடன் விவாதிப்பதற்காக முதல்வர்ஜெயலலிதா வரும் 11ம் தேதி டெல்லி செல்கிறார்.

அங்கு திட்டக் குழுத் துணைத் தலைவர் கே.சி.பந்த்துடன் விவாதிப்பார். கடந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ, 5,750கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. வளர்ந்துவிட்ட மாநிலம் என்ற பெயரால் தமிழகத்துக்கு போதிய அளவில் நிதிஒதுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந் நிலையில் இந்த ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 7,000 கோடியையாவது மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றுஜெயலலிதா கோர உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் நிதி கோரவும் திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுடன், நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைசெயலாளர் நாராயணன், திட்டத்துறைச் செயலாளர் பிந்து மாதவன், தமிழக திட்டக் குழுத் துணைத் தலைவர்நரேஷ் குப்தா ஆகியோரும் செல்கின்றனர்.

கூட்டத்திற்குப் பிறகு அன்று இரவே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X