For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கந்து வட்டி: பெண்ணை கடத்தி கொடுமைப்படுத்திய 2 பெண் ரெளடிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கந்து வட்டி ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்து இரு நாட்கள் ஆகியுள்ள நிலையில் முதன்முதலாக அச் சட்டத்தின் கீழ்மதுரையைச் சேர்ந்த இரு ரெளடிப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்புறவுத் தொழிலாளியான ஒரு பெண்ணுக்கு ரூ. 10,000 கடன் கொடுத்துவிட்டு இந்த இரு கேடுகெட்டஜென்மங்களும் ரூ. 40,000 வட்டி வசூலித்துள்ளன. மேலும் அந்தப் பெண்ணை இந்த இரு ரெளடிப் பெண்களும்வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர்.

மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்தவர் விஜயா (வயது 21). இவர் ஒரு மருத்துவனையில் துப்புறவுத்தொழலாளியாக பணியாற்றுகிறார். தந்தை ரிக்ஷா தொழிலாளி. இதனால் வீட்டில் சாப்பாட்டு மிகவும்சிரமப்பட்டனர்.

இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த முருகாயி (வயது 25), பவானி (வயது 25) ஆகிய கந்து வட்டிப்பெண்களிடம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் ரூ. 10,000 கடனாக வாங்கினார் விஜயா. இதில் பவானியின் கணவர்பாஸ்கர் ரயில்வேயில் பணியாற்றுகிறார். இவரும் வட்டிக்குப் பணம் தந்து வருகிறார். முருகாயியின் கணவர்மாநகராட்சியில் பணியாற்றிக் கொண்டே கந்து வட்டிக்குப் பணம் தந்து வருகிறார்.

இவர்களிடம் ரூ. 10,000 வாங்கிய விஜயா கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 40,000 வரை வட்டி கட்டிவிட்டார்.ஆனாலும் இவர்கள் அசலைக் கழிக்கவில்லை. கொடுக்கும் பணத்தையெல்லாம் வட்டியாகவே கழித்து வந்தனர்.வாங்கியதை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகமாக பணம் செலுத்திவிட்டார் விஜயா.

இந் நிலையில் வீட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் கடந்த 3 மாதங்களாக விஜயாவால் வட்டி கூடகட்ட முடியவில்லை. இதையடுத்து இந்த இரு பெண்களும் அடிக்கடி விஜயா வீட்டுக்கு வந்து கெட்டவார்த்தைகளால், வீதியே பார்க்கும் வகையில் திட்டிவிட்டும் தாக்கிவிட்டும் சென்றனர்.

இந் நிலையில் நேற்று முன் தினம் இந்த இரு பெண்களும் விஜயாவின் வீட்டுக்குச் சென்று அவரை பிடித்துஇழுத்துக் கொண்டு தெருவுக்கு வந்தனர். கதறியழுத அந்தப் பெண்ணை கழுத்தைப் பிடித்துத் தள்ளி ஒருவீட்டுக்குள் போட்டு அடைத்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.

உன்னை எவனாவது ஆம்பளைகிட்ட அனுப்பி எங்க காசை வசூல் பண்ணிக்கிறோம் என்று ஆபாச வார்த்தைகளால்பேசியுள்ளனர்.எப்படியாவது ஒரு வாரத்தில் பணம் கொடுத்துவிடுவதாக விஜயா கதற, நள்ளிரவில் 2 மணிக்குஅந்தப் பெண்ணை விடுவித்துள்ளனர்.

மனதில் வேதனையும், கண்ணில் அழுகையுமாக நள்ளிரவில் அந்தப் பெண் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம்புலம்பி அழுதார். மகளை ரெளடி ஜென்மங்கள் இழுத்துச் சென்றது தெரிந்தும் ஏதும் செய்ய முடியாமல் வீட்டில்அழுதபடி உட்கார்ந்திருந்தார் அவரது தந்தை.

இனியும் நாம் பொறுமையாக இருந்தால் உயிருக்கே கூட ஆபத்து வரலாம் என்று நினைத்த அவர்கள் விடிந்ததும்மதுரை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்குச் சென்று தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் தந்தனர்.

இதையடுத்து தெப்பக்குளம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்ட கமிஷ்னர் உடனே அந்த இருபெண்களையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பவானி மற்றும் முருகாயி ஆகிய இரு கந்து வட்டி மிருகங்களையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த இரு பெண்கள் மீதும் கந்துவட்ட ஒழிப்புச் சட்டத்தின் கீழும், ஆள் கடத்தல், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல்,மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்ய்பட்டன.

இதையடுத்து இந்த இருவரும் இன்று மதுரை முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைவிசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த இரு ரெளடிப் பெண்களும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் யாராவது 12 முதல் 18 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி வசூலித்தால் கந்து வட்டிச் சட்டத்தின்போலீசாரால் கீழ் கைது செய்ய முடியும். இதற்கான உத்தரவு கடந்த 10ம் தேதி தான் தமிழக அரசால்வெளியிடப்பட்டது.

தவறு செய்தவர்களுக்கு ரூ. 30,000 அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க முடியும். இச் சட்டத்தின் கீழ்முதன்முதலில் கைதாகியுள்ள இந்த பெண்களுக்கும் தண்டனை கிடைத்தால் கந்து வட்டிக் கும்பலுக்கு சரியானபாடமாக அமையும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X