கேரள நதிகளை தமிழக நதியுடன் இணைக்க ஆண்டனி எதிர்ப்பு
திருவனந்தபுரம்:
கேரள நதிகளை தமிழக நதியோடு இணைக்க அந்த மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நதிகள்இணைப்புக் குழுவின் தலைவர் சுரேஷ் பிரபுவுக்கு கேரள முதல்வர் ஆண்டனி ஆட்சேபணைக் கடிதம்அனுப்பியுள்ளார்.
தேசிய அளவில் நதிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ் கேரளத்தின் பம்பா, அச்சன்கோவில் நதிகளை தமிழகத்தின்வைப்பாறு நதியுடன் இணைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுரேஷ் பிரபு கேரள அரசுக்குக்கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் அனுப்பியுள்ள கேரள முதல்வர் ஆண்டனி, எங்களது நதிகளை கேரளத்துடன் இணைக்கும்திட்டத்தை ஏற்க மாட்டோம். இந்தத் திட்டத்தை மத்திய அரசு ஆரம்பத்திலேயே கைவிட்டுவிட வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியதை கேரள சட்டசபையிலும் ஆண்டனி இன்று உறுதி செய்தார்.
இதையடுத்து நதிகள் இணைப்புத் தொடர்பாக விரைவில் முதல்வர் கூட்டத்தைக் கூட்ட சுரேஷ் பிரபுதிட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து தான் கேரளத்துக்கு அரிசியும் காய்கறிகளும் போய்ச் சேருகின்றன. அம் மாநில விவசாயிகள்ரப்பர், ஏலம், பழங்கள் போன் பணப் பயிர்களைத் தான் விளைவிக்கின்றனர். தமிழகத்திற்கு கேரளத்தில் இருந்துவரும் நீரில் விளைவிக்கப்படும் அரிசி, பருப்பு, காய்கறிகறிகளைத் தான் கேரளம் நம்பியுள்ளது.
இந் நிலையில் தமிழக நதிகளுடன் கேரள நதிகள் இணைக்கப்படுவதை அம் மாநிலம் எதிர்த்துள்ளது.
தமிழகத்தின் புறக்கணிப்பு:
இதற்கிடையே நாட்டின் முக்கிய நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து ஆலோசிக்க பிரதமர் வாஜ்பாய்தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆனால், இதில் தமிழகம் சார்பில் யாரும்பங்கேற்கவில்லை.
இத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, பெண்ணாறு, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளையும்தூய்மையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் வாஜ்பாய், நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்க இக்கூட்டத்தில் அனைத்து மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர்.
ஆனால், பாலுவின் சுற்றுச்சூழல் துறையின் சார்பில் இக் கூட்டம் நடந்ததாலோ என்னவோ இக் கூட்டத்தை தமிழகஅரசு புறக்கணித்துள்ளது.


