For Quick Alerts
For Daily Alerts
இந்தியா வருகிறார் புஷ்
சென்னை:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் விரைவில் இந்தியா வரவுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்ராபர்ட் பிளாக்வில் கூறினார்.
சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அதிபர் புஷ் விரைவில் இந்தியா வரவுள்ளார். அவரது பயணத் திட்டம் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்றார்.
சென்னையில் உள்ள தனது நண்பர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்துப் பேச வந்துள்ளதாகபிளாக்வில் தெரிவித்தார்.
தனது தூதர் பதவியை ஏற்கனவே பிளாக்வில் ராஜினாமா செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஜூலையில் அவர் அமெரிக்கா திரும்பி விடுவார்.


