For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தா.கி. கொலை வழக்கு: இன்று அடையாள அணிவகுப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தா.கிருட்டிணன் கொலை வழக்கில், மதுரை மத்திய சிறையில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெறுகிறது.

Jaya met Tha kiruttinans family members
நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த தா.கி. குடும்பத்தினர்
தா.கிருட்டிணனின் சகோதரர் ராமையா, அவரது மகன் நெடுஞ்செழியன் ஆகியோர் குற்றவாளிகளை அடையாளம்காட்டுகிறார்கள்.

தா.கி. கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அடையாள அணிவகுப்பில்நிறுத்தப்படுவார்கள்.

அழகிரி- ராஜாத்தி அம்மாள் சந்திப்பு:

இந் நிலையில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க.அழகியை, கருணாநிதியின் துணைவி ராஜாத்திஅம்மாளும் மகள் கனிமொழியும் சந்தித்துப் பேசினார்.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் குடும்பத்தினருக்கும் ராஜாத்தி அம்மாள் குடும்பத்தினருக்கும் இடையேநல்லுறவு இருந்ததில்லை. ஆனால், கருணாநிதி கைதுக்குப் பிறகு நிலைமை மாறியது. இப்போது இருகுடும்பத்தினரும் நெருக்கமாக உளளனர்.

Rajathi Ammal&Kani moli
அழகிரியை சந்திக்க வரும் கனிமொழி, ராஜாத்தி அம்மாள்
ராஜாத்தி அம்மாளுக்கு கருணாநிதி கட்டியுள்ள புதிய வீட்டை ஸ்டாலின் போய் பார்த்துவிட்டு வந்தார்.

இந் நிலையில் அழகிரியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துள்ளார். உடன் மகள் கனிமொழியும் சென்றார். மேலும்அழகிரியின் தாய்மாமனான இயக்குனர் அமிர்தத்தின் மனைவி வசந்தாம்பாளும் உடன் சென்றார்.

இவர்களுக்குத் துணையாக வந்த முன்னாள் அமைச்சர் நேரு மற்றும சில திமுக எம்.எல்.ஏக்களை போலீசார்சிறைக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிறை வாசலில் இருந்த டீக் கடையில் போய் உட்கார்ந்துதிமுகவினருடன் கதை அடித்தார் நேரு.

அழகிரி வீட்டில் ஆதாரம் சிக்கவில்லை..

இதற்கிடையே அழகிரியின் மீது விசிடி காப்பிரைட் மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமானகடைகளில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், அழகிரியின் ராயல் வீடியோஸ் கடையில் சோதனை நடத்தியபோது லைசென்ஸ் இல்லாத 4,037 திருட்டுவிசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Alagiris video shop being raided

அழகிரியின் வீடியோ கடையில் நடக்கும் ரெய்டு
படம் (நன்றி-தினகரன்)

திருட்டு விசிடிக்களை பதுக்கி வைத்திருந்ததாக அழகிரி, கடை ஊழியர்கள் தாமோதரன், பாட்சா ஆகியோர் மீதுகாப்பிரைட் மீறல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். முதல் குற்றவாளியாக அழகிரிசேர்க்கப்பட்டுள்ளார்.

வீடியோ கடையில் சோதனை நடந்தபோது, அழகியின் மனைவி காந்தி, வழக்கறிஞர் பழனிச்சாமி ஆகியோர்உடன் இருந்தனர். சோதனை குறித்து பழனிச்சாமி கூறுகையில், தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி மீதுஆதாரம் கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள். எனவே என்ன செய்வதென்று தெரியாமல், திருட்டு விசிடிவைத்திருந்ததாக பொய் வழக்கைப் போட்டுள்ளனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X